நெல்லை அருகே பல லட்ச ரூபாய் மதிப்பிலான நிலம் வழங்கியதில் மோசடி - திமுக ஒன்றிய செயலாளரை கண்டித்து தாயும், மகளும் மாவட்ட ஆட்சித் தலைவர் முன்பாக தீக்குளிக்க முயற்சி

Sep 28 2020 1:35PM
எழுத்தின் அளவு: அ + அ -

வீட்டுமனைப் பட்டா வழங்க பணம் பெற்றுக்கொண்டு திமுக பிரமுகர் மோசடி செய்துவிட்டதாக குற்றஞ்சாட்டி, பாதிக்கப்பட்ட பெண்கள், நெல்லை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தீக்குளித்து தற்கொலை செய்துகொள்ளும் முடிவோடு வந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

திசையன்விளை பகுதியைச் சேர்ந்த பேபி மற்றும் அவரது மகள் ஜெயா ஆகியோர், நெல்லை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு இன்று சென்றிருந்தனர். அப்போது, பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார், அவர்களை பரிசோதித்தபோது, மண்ணெண்ணை கொண்டு வந்திருந்தது தெரியவந்தது. விசாரணையில், ராதாபுரம் திமுக ஒன்றியச் செயலாளர் ஜெகதீஷ், பல லட்சம் ரூபாய் வாங்கிக்கொண்டு தங்களுக்கு வீட்டுமனை பட்டா வழங்கியதாகவும், வீடு கட்ட முயன்றபோது அந்த இடம் வேறொருவருக்குச் சொந்தமானது என பிரச்னை எழுந்ததாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர். இதுதொடர்பாக திமுக ஒன்றியச் செயலாளர் ஜெகதீஷிடம் கேட்டபோது பணத்தை திருப்பித் தர மறுத்துவிட்டதால், தீக்குளித்து தற்கொலை செய்து கொள்ளும் முடிவோடு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு வந்ததாக தாயும், மகளும் தெரிவித்துள்ளனர். இதையடுத்து, நிலப் பிரச்னை தொடர்பாக, மாவட்ட ஆட்சியர் திருமதி.ஷில்பாவைச் சந்தித்து மனு கொடுத்தனர்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00