வீடியோ கான்ஃபரன்ஸ் விசாரணை வழக்கறிஞர்களுக்கு வரமாக அமைந்திருப்பதாக உயர்நீதிமன்ற மதுரை கிளை நீதிபதி மகிழ்ச்சி - ​இறுதி விசாரணையையும் நடத்தலாம் என யோசனை

Aug 10 2020 1:01PM
எழுத்தின் அளவு: அ + அ -

வீடியோ கான்பரன்ஸ் விசாரணை வழக்கறிஞர்களுக்கு வரமாக அமைந்திருப்பதாகவும், வீடியோ கான்பரன்ஸ் வசதி மூலம் இறுதி விசாரணை நடத்தலாம்' என்றும் சென்னை உயர்நீதிமன்ற மதுரைக்‍கிளை நீதிபதி தெரிவித்துள்ளார்.

உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் வீடியோ கான்பரன்ஸ் மூலம், கடந்த ஜூலை மாதத்தில் 5 ஆயிரத்து 20 மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டு, அதில், 4 ஆயிரத்து 832 மனுக்களுக்கு தீர்வு காணப்பட்டுள்ளது. வீடியோ கான்பரன்ஸ் விசாரணையில், கடந்த 2 மாதங்களாக வழக்கறிஞர்கள் குக்கிராமங்களில் இருந்தும், காரில் இருந்தவாறும், காரில் பயணம் செய்தபடியும் தங்கள் வாதங்களை திறம்பட எடுத்து வைத்ததாக நீதிபதி திரு. பி.புகழேந்தி பாராட்டு தெரிவித்துள்ளார். சில இடங்களில் இணையதள இணைப்பு சரியாக கிடைக்காத நிலையில், வழக்கறிஞர்கள் வழக்கை நடத்தும் ஆர்வம் காரணமாக, இணைப்பு கிடைக்கும் பகுதிகளுக்கு சென்று வீடியோ கான்பரன்ஸ் வசதியில் வாதங்களை எடுத்து வைத்ததாகவும் குறிப்பிட்டார். வீடியோ கான்பரன்ஸ் விசாரணை வழக்கறிஞர்களுக்கு வரமாக அமைந்திருப்பதாகவும், வீடியோ கான்பரன்ஸ் வசதியில் இறுதி விசாரணை நடத்தலாம் என்றும் நீதிபதி புகழேந்தி தெரிவித்தார்.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00