சென்னையில் ஆபரணத் தங்கம் சவரனுக்கு ரூ.400 உயர்ந்து ரூ.42,992-க்கு விற்பனை
Aug 6 2020 4:56PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை 43 ஆயிரத்தை நெருங்குகிறது. சவரனுக்கு 400 ரூபாய் உயர்ந்து, 42 ஆயிரத்து 992 ரூபாய்க்கு விற்பனையாகிறது.
சென்னையில் கடந்த சில தினங்களாக தங்கத்தின் விலை கிடுகிடுவென உயர்ந்து வருகிறது. சென்னையில் இன்று 22 கேரட் ஆபரணத்தங்கத்தின் விலை கிராமுக்கு 50 ரூபாய் உயர்ந்து, 5 ஆயிரத்து 374 ரூபாய்க்கு விற்பனையாகிறது. சவரனுக்கு 400 ரூபாய் அதிகரித்து, 42 ஆயிரத்து 992 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.
வெள்ளி விலை ஒரு கிராம் 81 ரூபாய் 60 காசுகளுக்கும், ஒரு கிலோ 81 ஆயிரத்து 600 ரூபாய்க்கும் விற்பனையாகிறது.