கொரோனா பணியில் உயிரிழந்த பணியாளர்களுக்‍கு அரசு நிதியுதவி - 28 முன்கள பணியாளர்கள் குடும்பத்திற்கு தலா 25 லட்சம் ரூபாய் நிவாரணம்

Aug 6 2020 11:34AM
எழுத்தின் அளவு: அ + அ -

கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு உயிரிழந்த முன்கள பணியாளர்கள் குடும்பத்திற்கு, 25 லட்சம் ரூபாய் நிவாரணத் தொகை வழங்க தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

தமிழ்நாட்டில் கொரோனா தொற்று பரவல் நாளுக்கு நாள் அதிகமாகி வரும் நிலையில், கொரோனா தொற்று பரவலை தடுக்க சுகாதாரத்துறையினர் கடுமையாக போராடி வருகின்றனர். முன்கள பணியாளர்களாக மருத்துவர்கள், செவிலியர்கள், சுகாதார ஊழியர்கள், காவல்துறையினர், அரசு அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர். சில நேரங்களில் அவர்களுக்கும் கொரோனா உறுதி செய்யப்பட்டு, அவர்களை மரணம் வரை கொண்டு சென்று விடுகிறது. கொரோனா பரவலை தடுக்கும் பணியில் ஈடுபட்டு வரும் முன்கள பணியாளர்களுக்கு நிவாரணம் வழங்க வேண்டும் என்று பலர் கோரிக்கை விடுத்து வந்தனர். இதையடுத்து, கொரோனாவால் உயிரிழந்த செங்கல்பட்டு அரசு பொது மருத்துவமனையின் டீன் சுகுமாரன், மாம்பலம் காவல் ஆய்வாளர் பாலமுருகன் உட்பட 28 பேர் குடும்பத்தினருக்கு, தலா 25 லட்சம் ரூபாய் நிதியுதவி அளிப்பதற்கான அரசாணையை தமிழக அரசு பிறப்பித்துள்ளது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00