பட்டா நிலத்தில் அளவுக்கு அதிகமாக மணல் எடுப்போர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரிய வழக்கு - ஆய்வு செய்து அறிக்கை சமர்ப்பிக்குமாறு சிவகங்கை மாவட்ட கனிமவளத்துறைக்கு உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவு

Aug 4 2020 3:38PM
எழுத்தின் அளவு: அ + அ -

பட்டா நிலத்தில் சட்டவிரோதமாக மணல் அள்ளுபவர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரிய வழக்கில், சிவகங்கை மாவட்ட கனிம வளத்துறை உதவி இயக்குனர் ஆய்வு செய்து அறிக்கை தாக்கல் செய்ய உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.

சிவகங்கை மாவட்டம் பச்சேரியை சேர்ந்த தர்மராஜ் என்பவர், உயர்நீதிமன்ற கிளையில் தாக்‍கல் செய்த மனுவில், பச்சேரி, கண்ணூர் பகுதிகளில் உள்ள நஞ்சை மற்றும் புஞ்சை பகுதிகளில் கண்ணூர் ராஜேந்திரன் என்பவருக்கு அவரது பட்டா நிலத்தில் மண் அள்ளுவதற்கு மாவட்ட ஆட்சியரால் அனுமதி வழங்கப்பட்டதாக தெரிவிக்‍கப்பட்டுள்ளது. ஒரு மீட்டர் ஆழத்திற்கு மிகாமலும், ஐந்து லாரிகள் மட்டுமே மணல் அள்ளி கொள்ளுவதற்கு அனுமதி வழங்கிய நிலையில், சட்டவிரோதமாக மிகப்பெரிய ஜே.சி.பி போன்ற இயந்திரங்கள் மூலம் மணலை பெரிய லாரிகளில் மூலம் அள்ளி கடத்திச் செல்வதாக புகார் தெரிவிக்‍கப்பட்டது. 10 நாட்களுக்கு மட்டுமே அனுமதி உள்ள நிலையிலும், 40 நாட்களுக்கு மேலாக மிகப்பெரிய லாரிகள் மூலம் மண்ணை அள்ளி ராஜேந்திரன் கடத்தி வருகிறார் என தெரிவிக்‍கப்பட்டது. எனவே இதனை தடுக்க நீதிமன்றம் சிவகங்கை மாவட்ட ஆட்சியருக்கு உத்தரவிட வேண்டும் என கோரிக்‍கை விடுக்‍கப்பட்டது.

இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள் சத்யநாராயணன், ராஜமாணிக்கம் அமர்வு, சிவகங்கை மாவட்ட கனிமவளத் துறை உதவி இயக்குனர், புகாரில் கூறப்பட்ட இடத்தை பார்வையிட்டு ஆய்வு செய்து அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டு வழக்கு விசாரணையை 8 வாரங்களுக்கு ஒத்தி வைத்தனர்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00