கல்லணையின் தலைமடைப் பகுதிக்‍கு காவிரி நீர் முழுமையாக வராததால் குறுவை சாகுபடி பாதிப்பு - விரக்‍தியால் விதைநெல்லை கொட்டி விவசாயிகள் போராட்டம்

Jul 11 2020 2:12PM
எழுத்தின் அளவு: அ + அ -

கல்லணையின் தலைமடைப் பகுதிக்‍கு காவிரி நீர் முழுமையாக வராததால் குறுவை சாகுபடி பாதிக்‍கப்பட்டுள்ளதாகக்‍கூறி, தஞ்சையில் விதைநெல்லை கொட்டி விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

மேட்டூர் அணையிலிருந்து திறக்‍கப்பட்ட தண்ணீர் பல இடங்களில் சென்றடையாததால் குறுவை சாகுபடியில் ஈடுபட்டுள்ள விவசாயிகள் தவித்து வருகின்றனர். கல்லணையின் தலைமடையான திருவலாம்பொழில், கோனேரிராஜபுரம் உள்ளிட்ட 15 கிராமங்களில் குறுவை சாகுபடிப் பணிகளை தொடங்குவதற்கு தண்ணீர் முழுமையாக கிடைக்காததால் சாகுபடி செய்ய முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாகக்‍கூறி, விதை நெல்லை கீழே கொட்டி, பொதுப்பணித்துறை அலுவலகத்தை முற்றுகையிட்டு விவசாயிகள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். பொதுப்பணித் துறை அலுவலர்களும், போலீசாரும் சமரசம் செய்து, தண்ணீர் திறக்க நடவடிக்கை எடுக்கப்படும் எனக்‍ கூறியதையடுத்து விவசாயிகள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00