தடை செய்யப்பட்ட சுருக்‍குமடி வலைகளுக்‍கு அனுமதி வழங்க வேண்டும் - கடலூர், நாகை மீனவர்கள் ஆயிரக்‍கணக்‍கில் திரண்டு போராட்டம்

Jul 11 2020 12:20PM
எழுத்தின் அளவு: அ + அ -

கடலூர், நாகை மாவட்டங்களில் சுருக்‍குமடி வலை மற்றும் அதிவேக எஞ்சின் பொருத்தப்பட்ட படகுகளில் மீன்பிடிக்‍க அனுமதி கோரி ஏராளமானோர் போராட்டங்களில் ஈடுபட்டனர்.

கடலூர் மாவட்டம் தேவனாம்பட்டினம், புதுப்பேட்டை, பரங்கிப்பேட்டை போன்ற கடல் பகுதிகளில் சுருக்‍குமடி மீன்வலைகளை பயன்படுத்தி, மீனவர்கள் சிலர் தொடர்ந்து மீன்பிடித்து வருவதாக பிரச்னை இருந்து வருகிறது. நேற்று முன்தினம் அங்குள்ள மீனவர்கள் சிலர், இதுபோன்ற வலைகளைப் பயன்படுத்தி பிடித்த சுமார் 40 டன் மீன்களை லாரிகள் மூலம் கொண்டு சென்றபோது அவற்றை மீன்வளத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். இதனைக்‍ கண்டித்து மீனவர்கள், வியாபாரிகள் என ஆயிரத்திற்கும் மேற்பட்டோர், கடலூர் மீன்வளத்துறை அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். இதேபோல், தேவனாம்பட்டினம் கடற்பகுதியில் 50க்‍கும் மேற்பட்ட நாட்டுப்படகுகளை நடுக்‍கடலில் நிறுத்தி கருப்புக்‍கொடி போராட்டத்திலும் ஈடுபட்டனர்.

நாகை மாவட்டம் பூம்புகார் சுற்றுலா வளாகத்தில், சுருக்கு மடி வலை மற்றும் அதிவேக என்ஜின்களை பயன்படுத்த அனுமதி வழங்கக் கோரி குழந்தைகள், பெண்கள் உட்பட 2 ஆயிரத்து 500 பேர் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதே கோரிக்கையை வலியுறுத்தி திருமுல்லைவாசல், புதுப்பட்டினம் கிராமங்களிலும் ஆயிரக்‍கணக்‍கானோர் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதேபோல் சுருக்‍குமடி வலைகளைப் பயன்படுத்தி மீன்களை பிடிப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்தும், மற்றொரு தரப்பினர் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். இதன் காரணமாக நாகை, கடலூர் மாவட்ட மீனவக்கிராமங்களில் பதற்றம் நிலவுகிறது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00