சாத்தான் குளம் ஜெயராஜ் பென்னிக்ஸ் மரண வழக்கை தாமாக முன்வந்து விசாரிக்கும் சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை - நீதிபதிகள் சத்தியநாராயணன், ராஜமாணிக்கம் அமர்வில் இன்று விசாரணை

Jul 9 2020 4:11PM
எழுத்தின் அளவு: அ + அ -

சாத்தான்குளம் தந்தை-மகன் கொல்லப்பட்ட வழக்கில், மேலும் 5 காவலர்கள் கைது செய்யப்பட்ட நிலையில், அவர்களில் மூன்று பேர் நீதிமன்ற காவலில் சிறையில் அடைக்கப்பட்டனர்.

தந்தை, மகன் கொலை வழக்கில் விசாரணையை தொடங்கிய சிபிசிஐடி, சாத்தான்குளம் காவல் ஆய்வாளர், உதவி ஆய்வாளர்கள் உட்பட 5 பேரை கைது செய்தனர். அவர்கள் மதுரை மத்திய சிறையில் அடைக்‍கப்பட்டுள்ளனர். இந்நிலையில், சாத்தான்குளத்தில் பணியில் இருந்த சிறப்பு உதவி ஆய்வாளர் பால்துரை, காவலர்கள் செல்லத்துரை, வெயில்முத்து, சாமத்துரை, தாமஸ் பிரான்சிஸ் ஆகிய மேலும் 5 பேரிடம் விசாரணை நடத்தப்பட்டது. தூத்துக்குடி சிபிசிஐடி அலுவலகத்தில் நடைபெற்ற இந்த விசாரணைக்கு பிறகு 5 காவலர்களும் கைது செய்யப்பட்டனர். அவர்களுக்கு மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டதில், பால்துரை மற்றும் தாமஸ் ஆகியோருக்கு உடல்நலம் பாதிக்கப்பட்டிருந்ததால் தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இதனிடையே, தான் எந்த தவறும் செய்யவில்லை என்று கூறி பால்துரை காவலர்களிடம் கூச்சலிட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

இந்த நிலையில் செல்லத்துரை, வெயில்முத்து, சாமத்துரை ஆகியோர் தூத்துக்குடி குற்றவியல் நீதிமன்ற நீதிபதி ஹேமா முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்டனர். மூவரையும் 14 நாட்கள் நீதிமன்ற காவலில் சிறையில் அடைக்க நீதிபதி உத்தரவிட்டதையடுத்து, அவர்கள் பேரூரணி சிறையில் அடைக்கப்பட்டனர்.

இதனிடையே, தந்தை மகன் இறப்பு தொடர்பாக சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை தாமாக முன்வந்து தொடுத்துள்ள வழக்கு நீதிபதிகள் திரு. சத்தியநாராயணன் திரு.ராஜமாணிக்கம் அமர்வில் இன்று விசாரணைக்கு வருகிறது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00