தமிழகம் முழுவதும் Friends of Police அமைப்புக்‍கு தடை - தமிழக அரசு ஆணை பிறப்பித்து உத்தரவு

Jul 9 2020 1:41PM
எழுத்தின் அளவு: அ + அ -

தமிழகக்‍ காவல்துறையினரின் தூண்டுதல் பேரில், Friends of Police அமைப்பினர், பொதுமக்‍களை அச்சுறுத்தியும், அடித்து துன்புறுத்தியும், அத்துமீறல்களில் ஈடுபடுவதாக பெருமளவு புகார்கள் எழுந்த நிலையில், தமிழகம் முழுவதும், "Friends of Police" அமைப்புக்‍கு தடை விதிக்‍கப்பட்டுள்ளது.

சாலைப் போக்‍குவரத்து விதிமுறைகளை நிலைநாட்டுவது உள்ளிட்ட பணிகளில் காவல்துறையினருக்‍கு உதவுவதற்காக Friends of Police என்ற அமைப்பு உருவாக்‍கப்பட்டதாகக்‍ கூறப்படுகிறது. ஆனால், இந்த அமைப்பில் உள்ள இளைஞர்கள் பலர் காவல்துறையினரின் தூண்டுதல் பேரில் முறைகேடுகளிலும், அத்துமீறல்களிலும் ஈடுபடுவதாக புகார்கள் எழுந்துள்ளன. குறிப்பாக தூத்துக்‍குடி மாவட்டம் சாத்தான்குளத்தில் தந்தையும் மகனும் காவல் நிலையத்தில் போலீசாரால் கொடூரமாக அடித்துக் ‍கொல்லப்பட்ட சம்பவத்தில் Friends of Police அமைப்பைச் சேர்ந்த இளைஞர்களுக்‍கும் தொடர்புள்ளதாக குற்றச்சாட்டு எழுந்தது. இதுகுறித்து அவர்களிடம் புலன்விசாரணை நடத்தப்பட்டதாகவும் செய்திகள் வெளியாயின.

இந்நிலையில், Friends of Police அமைப்பு குறித்து தமிழக காவல்துறை தலைமை இயக்‍குநரிடமிருந்து பெறப்பட்ட அறிக்‍கையின் அடிப்படையில், தமிழகம் முழுவதும் Friends of Police அமைப்புக்‍கு தடைவிதிக்‍கப்படுவதாக தமிழக அரசு நேற்று அறிவித்துள்ளது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00