திருப்பூரில் கொரோனாவால் பாதிக்‍கப்பட்ட மருத்துவப் பணியாளர் அலைக்‍கழிப்பு - மருத்துவமனைக்‍கு அழைத்துச் செல்ல ஆம்புலன்ஸ் வராமல் பல மணி நேரம் காத்திருந்த அவலம்

Jul 3 2020 6:20PM
எழுத்தின் அளவு: அ + அ -

திருப்பூர் மாவட்டத்தில் மருத்துவப் பணியாளர் ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதியான நிலையில், 15 மணி நேரத்திற்கும் மேலாக, மருத்துவமனைக்கு அழைத்துச் செல்ல ஆம்புலன்ஸ் வராமல் அலைக்கழிக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

திருப்பூர் மாவட்டத்தில், கொரோனா பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 194-ஆக அதிகரித்துள்ளது. இதில், திருப்பூர் அரசு மருத்துவமனையில் 48 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். கொரோனா தொற்று உறுதியானவர்களை, ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவமனைக்கு அழைத்து வந்து சிகிச்சை அளிக்கப்படுகிறது. அவிநாசியில் உள்ள நாராசா வீதியை சேர்ந்த 59 வயதான நபருக்கு கொரோனா தொற்று உறுதியான நிலையில், 15 மணி நேரம் ஆகியும், அவரை அழைத்துச் செல்ல ஆம்புலன்ஸ் வரவில்லை. இதனைத் தொடர்ந்து, மறுநாள் அவராகவே தனது மகனுடன், திருப்பூர் அரசு மருத்துவமனைக்கு சென்றுள்ளார். இவர், கோவை ESI மருத்துவமனையில் ஆய்வக உதவியாளராக பணிபுரிந்து வரும் நிலையில், மருத்துவ பணியாளரின் சிகிச்சை விஷயத்திலேயே அலட்சியமாக இருப்பது வேதனை அளிப்பதாக, அப்பகுதி மக்கள் வேதனை தெரிவித்துள்ளனர்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00