சாத்தான்குளம் காவல்நிலையத்தை வருவாய்த்துறை கட்டுப்பாட்டில் இருந்து விலக்‍கிக்‍ கொள்ளலாம் - தமிழக அரசுக்‍கு சென்னை உயர்நீதிமன்ற மதுரைக்‍கிளை அனுமதி

Jul 3 2020 3:27PM
எழுத்தின் அளவு: அ + அ -

சாத்தான்குளம் காவல்நிலையத்தை வருவாய்த்துறையினரின் கட்டுப்பாட்டில் இருந்து விடுவிக்‍க தமிழக அரசுக்‍கு சென்னை உயர்நீதிமன்ற மதுரைக்‍கிளை அனுமதி வழங்கியுள்ளது.

சாத்தான்குளத்தில் ஜெயராஜ், பென்னிக்‍ஸ் ‍கொலை வழக்‍கு தொடர்பாக சாத்தான்குளம் காவல்நிலையத்தில் தடயங்களை அழிக்க முயற்சி நடைபெற்றதால், நீதிமன்ற உத்தரவின்பேரில் வருவாய்த்துறை கட்டுப்பாட்டுக்‍கு கொண்டு வரப்பட்டது. இந்நிலையில், இதுதொடர்பாக வழக்‍கு விசாரணை சென்னை உயர்நீதிமன்ற மதுரைக்‍கிளையில் இன்று நடைபெற்றது. அப்போது, வருவாய்த்துறை கட்டுப்பாட்டில் உள்ள சாத்தான்குளம் காவல்நிலையத்தை விடுவிக்‍க தமிழக அரசு சார்பில் கோரிக்‍கை வைக்‍கப்பட்டது. இதனை ஏற்ற நீதிபதிகள் பி.என்.பிரகாஷ், புகழேந்தி ஆகியோர் கொண்ட அமர்வு, சாத்தான்குளம் காவல்நிலையத்தை வருவாய்த்துறை கட்டுப்பாட்டில் விடுவிக்‍க அனுமதி வழங்கியது. இதையடுத்து, சாத்தான்குளம் காவல்நிலையம் மீண்டும் காவல்துறை கட்டுப்பாட்டில் கொண்டு வரப்பட்டுள்ளது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00