தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 3 ஆயிரத்து 949 பேருக்‍கு கொரோனா பாதிப்பு - மேலும் 62 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு

Jun 29 2020 6:35PM
எழுத்தின் அளவு: அ + அ -
தமிழகத்தில் இன்று புதிய உச்சமாக, ஒரேநாளில் 3 ஆயிரத்து 949 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதால், மொத்த பாதிப்பு 86 ஆயிரத்தை கடந்தது. சென்னையில் இதுவரை இல்லாத அளவுக்‍கு இன்று ஒரே நாளில் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்டோருக்‍கு நோய்த்தொற்று உறுதியாகியுள்ளது.

தமிழகத்தில் புதிய உச்சமாக, ஒரே நாளில் கொரோனா பாதிப்பு இன்று 4 ஆயிரத்தை நெருங்கியது. இன்று ஒரேநாளில் 3 ஆயிரத்து 949 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டது. இதனால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 86 ஆயிரத்து 224-ஆக உயர்ந்தது. இன்று தொற்று உறுதி செய்யப்பட்டவர்களில் 2 ஆயிரத்து 167 பேர் சென்னையை சேர்ந்தவர்கள். சென்னையில் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 55 ஆயிரத்து 969-ஆக உயர்ந்தது. இன்று ஒரே நாளில் 62 பேர் கொரோனா தாக்குதலால் பலியானதையடுத்து, உயிரிழந்தோர் எண்ணிக்கை ஆயிரத்து 141 -ஆக உயர்ந்தது. இன்று மட்டும் 2 ஆயிரத்து 212 பேர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பினர். இதுவரை தமிழகத்தில் 47 ஆயிரத்து 749 பேர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பினர்.

தமிழக சுகாதாரத்துறை அளித்த தகவல்படி, அரியலூர், நாமக்‍கல், பெரம்பலூர் ஆகிய மாவட்டங்களைத் தவிர்த்து அனைத்து மாவட்டங்களிலும் இன்று கொரோனா தொற்று உறுதியானது. மதுரை மாவட்டத்தில் 303 பேருக்‍கும், செங்கல்பட்டு மாவட்டத்தில் 187 பேருக்‍கும், திருவள்ளூர் மாவட்டத்தில் 154 பேருக்‍கும், வேலூர் மாவட்டத்தில் 144 பேருக்‍கும், காஞ்சிபுரம் மாவட்டத்தில் 75 பேருக்‍கும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • MEDHUVA PESUNGA

    Mon - Fri : 06:57

  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

  • MAKKALODU MAKKAL SELVAR

    Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

  • ACHUM ASALUM

    Mon - Fri : 09:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4153.00 RS. 4361.00
மும்பை Rs. 3975.00 Rs. 4075.00
டெல்லி Rs. 3980.00 Rs. 4100.00
கொல்கத்தா Rs. 4009.00 Rs. 4149.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00