ரூ.1 கோடி கேட்டு மிரட்டுகிறார்கள் - வனிதா விஜயகுமார் : கணவரின் முதல் மனைவியின் புகார் குறித்து விளக்கம்

Jun 29 2020 6:22PM
எழுத்தின் அளவு: அ + அ -
நடிகை வனிதா விஜயகுமார், தனது கணவரின் முதல் மனைவி எலிசபெத் ஹெலன், ஒரு கோடி ரூபாய் கேட்டு மிரட்டுவதாக குற்றம் சாட்டியுள்ளார்.

நடிகை வனிதா விஜயகுமார், விஷுவல் எஃபெக்ட்ஸ் இயக்குநர் பீட்டர் பால் ஆகியோரின் திருமணம் சென்னையில் கடந்த சனிக்கிழமையன்று நடைபெற்றது. இதையடுத்து, பீட்டர் பாலின் முதல் மனைவி எலிசபெத், தன்னிடம் விவாகரத்து பெறாமல் தனது கணவர், நடிகை வனிதாவை திருமணம் செய்து கொண்டதாக வடபழனி காவல்நிலையத்தில் புகார் அளித்தார். இதனால், வனிதா விஜயகுமாரின் 3-வது திருமணம் சர்ச்சைக்‍குள்ளானது.

இந்நிலையில், பீட்டர் பால், 8 வருடங்களுக்கு முன்பே மனைவியைப் பிரிந்துவிட்டார் என்றும், அவரைப் பற்றி தனக்கு முழுமையாகத் தெரியும் என்றும் வனிதா கூறியுள்ளார். இருவரும் தனித்தனியாகத்தான் வாழ்ந்து வந்தார்கள் என்றும், அவர்களுக்கிடையே எவ்விதப் பேச்சுவார்த்தையும் கிடையாது என்றும் தெரிவித்துள்ளார். பீட்டர் பாலின் முதல் மனைவி எலிசபெத், ஒரு கோடி ரூபாய் கேட்பதாக தெரிவித்த வனிதா, அவ்வளவு பணத்திற்கு தாங்கள் எங்கே போவது? என்று கேள்வி எழுப்பியுள்ளார். இந்தப் பிரச்னையை தங்கள் வழக்கறிஞர் பார்த்துக்கொள்வார் என்றும் கூறியுள்ளார்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • MEDHUVA PESUNGA

    Mon - Fri : 06:57

  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

  • MAKKALODU MAKKAL SELVAR

    Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

  • ACHUM ASALUM

    Mon - Fri : 09:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4153.00 RS. 4361.00
மும்பை Rs. 3975.00 Rs. 4075.00
டெல்லி Rs. 3980.00 Rs. 4100.00
கொல்கத்தா Rs. 4009.00 Rs. 4149.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00