சென்னையில் கொரோனா பரிசோதனை செய்ய வருவோரிடம் ஆதார் எண்ணைப் பெற வேண்டும் - தனியார் ஆய்வகங்களுக்‍கு மாநகராட்சி உத்தரவு

Jun 4 2020 12:29PM
எழுத்தின் அளவு: அ + அ -

சென்னையில் கொரோனா பரிசோதனை செய்யும் தனியார் ஆய்வகங்கள், பரிசோதனை செய்ய வருபவர்களிடம் ஆதார் உள்ளிட்ட விவரங்களை சேகரிக்க வேண்டும் என சென்னை மாநகராட்சி உத்தரவிட்டுள்ளது.

சென்னை மாநகராட்சி ஆணையர் திரு.பிரகாஷ் வெளியிட்டுள்ள அறிக்‍கையில், சென்னையில் கொரோனா பரிசோதனை செய்வதற்காக 10 அரசு பரிசோதனை ஆய்வகங்கள், 13 தனியார் பரிசோதனை ஆய்வகங்கள் இருப்பதாகத் தெரிவித்துள்ளார். தனியார் பரிசோதனை ஆய்வகங்களில் கொரோனா பரிசோதனைக்கு வருபவர்களிடம், அவர்களது தொலைபேசி எண் சரிபார்த்த பின்பு பரிசோதனை செய்யப்பட வேண்டும் - முகவரி, ஆதார் எண் உள்ளிட்டவற்றை கட்டாயம் பெற வேண்டும் என்றும் அறிவுறுத்தியுள்ளார். கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட நபர்களிடம் இருந்து, அதிக நபர்களுக்கு பரவும் என்பதால் தனியார் ஆய்வகங்கள் விழிப்போடு செயல்பட வேண்டும் என்றும் கேட்டுக்‍கொண்டுள்ளார். தொற்று உறுதி செய்யப்பட்டவுடன், அந்த நபர்களின் விவரங்களை மாநில சுகாதாரத்துறை மற்றும் சென்னை மாநகராட்சிக்கு உடனடியாக தெரியப்படுத்த வேண்டும் என மாநகராட்சி ஆணையர் தெரிவித்துள்ளார்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00