தமிழகத்தில் மீனவர்கள் மீன் பிடிக்க இன்று முதல் அனுமதி : கோரிக்கைகளை வலியுறுத்தி மீனவர்கள் கடலுக்குள் செல்லாமல் புறக்கணிப்பு

Jun 1 2020 5:11PM
எழுத்தின் அளவு: அ + அ -

தமிழகத்தில் இன்று முதல் மீன் பிடிக்க அனுமதி வழங்கப்பட்ட நிலையில், பெரும்பாலான மீனவர்கள் கடலுக்குள் செல்வதை புறக்கணித்தனர்.

ஊரடங்கு காரணமாக கடந்த 60 நாட்களுக்கு மேலாக தமிழகத்தில் மீனவர்கள் மீன் பிடிக்க கடலுக்கு செல்லாமல் இருந்தனர். இந்நிலையில், இன்று முதல் மீன் பிடிக்க அனுமதி வழங்கப்பட்ட நிலையில், மீனவர்கள் அதிகாலையிலேயே கடலுக்கு சென்றனர். அதேவேளையில், ஏற்றுமதி ரகமான இறால், நண்டு, கணவாய் மீன்களை கொள்முதல் செய்ய வழிவகை இல்லாததால், நாகை மாவட்டத்தில் உள்ள 54 மீனவ கிராமங்களைச் சேர்ந்த 1 லட்சம் மீனவர்கள் இன்று கடலுக்கு மீன்பிடிக்கச் செல்லவில்லை. இதன் காரணமாக நாகை, தரங்கம்பாடி, பூம்புகார், பழையார் உள்ளிட்ட துறைமுகங்களில் 2 ஆயிரம் விசைப்படகுகள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. ஊரடங்கினால் வாழ்வாதாரத்தை இழந்துள்ள மீனவர்களுக்கு தற்போதைய சூழலில் கடலுக்குச் செல்லும் விசைப்படகுகளுக்கு தேவையான டீசல் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களை எடுத்துச் செல்வதற்கு போதிய பணம் இல்லை எனக் கூறும் நாகை மீனவர்கள், ஐரோப்பியா மற்றும் ஆசிய நாட்டிற்கு ஏற்றுமதி செய்யப்படும் மீன்களை எடுத்து செல்ல, சரக்‍கு விமான போக்குவரத்தை மத்திய-மாநில அரசுகள் இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளனர்.

கிழக்கு கடல் பகுதியில் மீனவர்கள் மீன்பிடி தடை காலம் முடிவடைந்து இன்று முதல் மீன்பிடிக்கச் செல்லலாம் என அரசு அறிவித்திருந்த நிலையில், கன்னியாகுமரி சின்னமுட்டம் மீன்பிடி துறைமுக மீனவர்கள் இன்று மீன்பிடிக்க செல்லவில்லை. மீன் பிடிக்கும் நேரம் உட்பட அரசின் அறிவிப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து, கடலுக்கு செல்லவில்லை என மீனவர்கள் தெரிவித்துள்ளனர்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00