ஊதியம் பிடித்தம் செய்யப்பட்டதால் போக்‍குவரத்து தொழிளார்கள் அதிர்ச்சி - தமிழக அரசை கண்டித்து ஆர்ப்பாட்டம்

May 31 2020 2:49PM
எழுத்தின் அளவு: அ + அ -

அரசு போக்குவரத்து ஊழியர்களுக்கு ஊதியம் பிடித்தம் செய்யப்பட்ட​தை கண்டித்து தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுப்பட்டனர்.

கொரோனா பரவலை தடுப்பதற்காக பொது தடை உத்தரவை அமல் படுத்திய தமிழக அரசு, போக்‍குவரத்தை முற்றிலுமாக நிறுத்தியது. இதன் காராணமாக போக்‍குவரத்து ஊழியர்கள், பணிக்‍கு செல்லாமல் ​வீட்டில் இருந்தபடி கொரோனா தடை விதிமுறைகளை பின்பற்றி வந்தனர். இந்தநிலையில் தற்போது அவர்களின் ஊதியம் பிடித்தம் செய்யப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு ஏப்ரல் மாதத்தில் தொடங்கி இந்த ஆண்டு ஃபிப்ரவரி மாதம் வரை ஊழியர்கள் வருகை தந்ததை சராசரியாகக்‍ கணக்‍கிட்டு, அவர்களுடைய விடுமுறை நாட்களையும் கழித்து இந்த மாத ஊதியம் வழங்கப்பட்டதாகவும், இதனால் ஒவ்வொரு ஊழியருக்‍கும் 5 ஆயிரம் ரூபாய் முதல் 15 ரூபாய் வரை இழப்பு ஏற்பட்டுள்ளது. கொரோனா நிவாரண நிதியாக தங்கள் ஒருநாள் ஊதியத்தை வழங்கியதன் மூலம் அரசுக்‍கு 14 கோடியே 10 லட்சம் ரூபாய் கிடைத்துள்ள நிலையில், தங்கள் ஊதியம் பிடித்தம் செய்யப்பட்டதால், அதிர்ச்சியடைந்த தொழிலாளர்கள், தமிழக அரசின் நடவடிக்‍கையைக்‍ கண்டித்து, சென்னையில் இன்று வடபழநி, கே.கே.நகர் உள்ளிட்ட 32 பணிமனைகளில் உள்ளிருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

நெல்லை மாவட்டம் வண்ணாரப்பேட்டையில் உள்ள அரசு போக்குவரத்து கழகம் முன்பு அனைத்து தொழிற்சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த போராட்டத்தின் போது தமிழக அரசை கண்டித்து தொழிலாளர்கள் முழக்கங்கள் எழுப்பினர்.

இதேபோல் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் நடைபெற்ற ​ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்ட போக்‍குவரத்து தொழிலாளர்கள் தமிழக அரசை கண்டித்து முழக்‍கமிட்டனர்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00