ஏழை-எளிய மக்கள், தூய்மைப் பணியாளர்களுக்கு கழகத்தின் சார்பில் நல உதவிகள் - அரிசி, காய்கறிகள், மளிகை, கபசுரக் குடிநீர் விநியோகம்

May 29 2020 3:20PM
எழுத்தின் அளவு: அ + அ -

தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும் கழகத்தின் சார்பில், ஏழை-எளிய மக்கள், தூய்மைப் பணியாளர்கள், தொழிலாளர்கள், ஆதரவற்ற பெண்கள், முதியவர்கள் உள்ளிட்டோருக்கு அரிசி, காய்கறிகள், மளிகை, கபசுரக் குடிநீர் உள்ளிட்ட பொருட்கள் வழங்கப்பட்டு வருகின்றன.

செங்கல்பட்டு வடக்கு மாவட்டம் ஆலந்தூர் பகுதி கழகம் சார்பில் மாவட்ட பிரதிநிதி சுதா மற்றும் மாவட்ட அம்மா பேரவை இணைச்செயலாளர் செயலாளர் திரு. சரவணன் ஏற்பாட்டில் ஆலந்தூர் பகுதி செயலாளர் திரு. A N. லட்சுமிபதி தலைமையில் பொதுமக்களுக்கு அரிசி, பருப்பு, எண்ணெய், ஒரு வாரத்திற்குத் தேவையான காய்கறிகள் மற்றும் முக கவசம் ஆகியவை வழங்கப்பட்டன. கழக தேர்தல் பிரிவுச் செயலாளரும் மண்டல பொறுப்பாளருமான திரு.G. செந்தமிழன் செங்கல்பட்டு வடக்கு மாவட்ட செயலாளர் திரு. ம.கரிகாலன் உள்ளிட்ட கழக நிர்வாகிகள் நிவாரண உதவிகளை வழங்கினர்.

விழுப்புரம் தெற்கு மாவட்டம் காணை தெற்கு ஒன்றியம் சார்பில் கொரோனா ஊரடங்கால் வாழ்வாதாரம் இழந்து தவிக்கும் 300 பேருக்கு அரிசி, காயகறி உள்ளிட்ட நிவாரணப் பொருட்களை மாவட்ட செயலாளர் திரு. பாலசுந்தரம் வழங்கினார். கழக அமைப்பு செயலாளர் திரு.கணபதி, மாவட்ட துணைச் செயலாளர் திரு.பார்த்திபன் உள்ளிட்ட நிர்வாகிகள் உடனிருந்து நிவாரண பொருட்களை வழங்கினர்.

கடலூர் வடக்கு மாவட்டம் காடாம்புலியூர் காந்திநகர் பகுதியில் வசிக்கும் ஏழை எளிய மக்களுக்கு கோதுமை மாவு, கேழ்வரகு மாவு, காய்கறிகள் உள்ளிட்ட நிவாரணப் பொருட்கள் வழங்கப்பட்டன. பண்ருட்டி வடக்கு ஒன்றிய செயலாளர் திரு. கலைமணி ஏற்பாட்டில் கடலூர் வடக்கு மாவட்ட அம்மா பேரவை செயலாளர் டாக்டர் ஆர். பக்தரட்சகன், மாவட்ட அம்மா தொழிற்சங்க பேரவை செயலாளர் திரு. மனோகரன் ஆகியோர் தலைமையில் கடலூர் வடக்கு மாவட்ட செயலாளர் திரு. அக்ரி.பி.முருகேசன் நிவாரணப் பொருட்களை வழங்கினார்.

நெல்லை மாநகர் மாவட்ட கழகம் சார்பில் கொரோனா வைரஸ் தொற்றில் இருந்து விடுபடக் கோரி நாங்குநேரியில் வெற்றி விநாயகர் கோயிலில் சிறப்பு பூஜை நடைபெற்றது. இந்த பூஜையில் நெல்லை மாநகர் மாவட்ட செயலாளர் திரு. S.பரமசிவ ஐயப்பன், அமைப்புச் செயலாளர் திரு.ஏ பி. பால் கண்ணன், மாநில புரட்சித்தலைவி தொழிற்சங்க பேரவை பொருளாளர் திரு. நெல்லைபரமசிவம் உள்ளிட்ட கழக நிர்வாகிகள் பலர் கலந்துகொண்டனர்.

திருப்பூர் புறநகர் மாவட்டக் கழகம் சார்பில், தாராபுரம் தொகுதிக்கு உட்பட்ட அலங்கியம் ஊராட்சியில் வசிக்கும் தூய்மைப் பணியாளர்கள், முடி திருத்துவோர், சலவைத் தொழிலாளிகள் என 70 பேருக்கு, தலா 5 கிலோ அரிசி, சமையல் எண்ணெய் உள்ளிட்ட 13 வகையான நிவாரணப் பொருட்களை, மாவட்ட அவைத்தலைவர் சங்கரண்டாம்பாளையம் கே.எஸ். நரேந்திரன் முன்னிலையில், ஒன்றிய அவைத்தலைவர் செல்லதுரை, அலங்கியம் ஊராட்சி செயலாளர் செந்தில்குமார் ஆகியோர் வழங்கினர். இந்நிகழ்ச்சியின் போது தாராபுரம் நகரக் கழகச் செயலாளர் வாரணவாசை உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

தேனி மாவட்டக் கழகச் செயலாளர் திரு முத்துசாமி ஆலோசனைப்படி, கம்பம் ஒன்றிய கழகச் செயலாளர் திரு. S.P.சேகரன் தலைமையில், நாராயண தேவன்பட்டி ஊராட்சியில் உள்ள 100 குடும்பங்களுக்கு, கிளைச் செயலாளர் செல்வகுமார், கழக நிர்வாகிகள் விமல்முருகன், காசி ஆகியோர் இணைந்து, அரிசி, சமையல் எண்ணெய் உட்பட அத்தியாவசியப் பொருட்களை வழங்கினர்.

திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி மேற்கு ஒன்றியத்திற்கு உட்பட்ட சேரன்குளம் கிராமத்தில், மாவட்ட மீனவர் அணி இணைச்செயலாளர் போஸ் ஏற்பாட்டின் பேரில், திருவாரூர் மாவட்டச் செயலாளர் திரு. எஸ்.காமராஜ், 500 குடும்பங்களுக்கு அரிசி, மளிகை பொருட்கள் மற்றும் காய்கறிகள், முககவசம் அடங்கிய நிவாரண தொகுப்பினை வழங்கினார். இந்நிகழ்ச்சியில் கழக தேர்தல் பிரிவு இணைச் செயலாளர் திரு. மலர்வேந்தன் உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.

தச்சநல்லூர் கோவில் பூசாரிகள் 30 பேருக்கு, தலா 5 கிலோ அரிசியும், ஒவ்வொருவருக்கும் 250 ரூபாய் ரொக்கப் பணத்தையும், நெல்லை மாநகர் மாவட்டச் செயலாளர் திரு. பரமசிவ ஐயப்பன், கழக அமைப்புச் செயலாளர் திரு. ஏ.பி. பால் கண்ணன், கழக புரட்சித்தலைவி தொழிற்சங்க பேரவை பொருளாளர் நெல்லை திரு. பரமசிவம் ஆகியோர் வழங்கினர்.

நாமக்கல் கிழக்கு மாவட்டம் எருமப்பட்டி மேற்கு ஒன்றிய கழகம் சார்பாக, அலங்காநத்தம், எருமப்பட்டி உள்ளிட்ட பகுதியிலுள்ள தூய்மைப் பணியாளர்கள், மற்றும் பொதுமக்கள் நூற்றுக்கும் மேற்பட்டோருக்கு அரிசி காய்கறிகள் வழங்கப்பட்டன. ஒன்றிய கழகச் செயலாளர் ஆர்.ரகு, பொருளாளர் பி. அன்பு செழியன், மாவட்டக் கழக துணைச் செயலாளர் பி. சந்திரன் உள்ளிட்ட நிர்வாகிகள் பங்கேற்றனர்.

செங்கல்பட்டு வடக்கு மாவட்ட, அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் சார்பில், தாம்பரம் நகர கழகச் செயலாளர் திரு. N. கிருஷ்ணமூர்த்தி தலைமையில், தாம்பரம் நகர அவைத்தலைவர் திரு. அருள் கென்னடி முன்னிலையில், தாம்பரம் அடுத்த குறிஞ்சிநகரில் வசிக்கும் ஏழை, எளிய மக்கள் 100-க்கும் மேற்பட்டோருக்கு, ஒரு வாரத்திற்கு தேவையான அரிசி, காய்கறிகள் உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்களை, செங்கல்பட்டு வடக்கு மாவட்ட கழக செயலாளர் திரு. ம.கரிகாலன் வழங்கினார். இதில், கழக நிர்வாகிகள் பங்கேற்றனர்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00