அரசு மருத்துவமனை தலைமை செவிலியர் உயிரிழந்த விவகாரம் - கொரோனா இல்லை என்ற மருத்துவமனை நிர்வாகத்தின் அறிவிப்பால் சர்ச்சை

May 29 2020 1:43PM
எழுத்தின் அளவு: அ + அ -

சென்னையில் உள்ள அரசு ராஜீவ் காந்தி மருத்துவமனையில் பணியாற்றி வந்த தலைமை செவிலியர் பிரிசில்லா கொரோனா பாதிப்பின் காரணமாக உயிரிழந்த நிலையில், அவர் கொரோனாவால் இறக்கவில்லை என்று மருத்துவமனை நிர்வாகம் கூறியுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனையில் தலைமை செவிலியராக பணிபுரிந்து வந்தவர் பிரிசில்லா. இவரது பணி கடந்த மார்ச் மாதத்துடன் ஓய்வு பெற இருந்த நிலையில், தமிழகஅரசின் புதிய அறிவிப்பு காரணமாக மேலும் ஒரு வருடம் பணி நீட்டிப்பு பெற்றார். கடந்த 24ம் தேதி முதல் கொரோனா வார்டில் அவர் சிகிச்சைப் பெற்று வந்த நிலையில், கடந்த 26ம் தேதி உயிரிழந்தார். அவரது இறப்பிற்கு கொரோனாவே காரணம் என பலரும் குற்றம் சாட்டிவரும் நிலையில், கொரோனா பாதிப்பால் ஜோன் மேரி பிரிசில்லா இறக்கவில்லை என கூறி அவரது உடலை, குடும்பத்தாரிடமே அளித்துவிட்டோம் என்று மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது. செவிலியர் பிரிசில்லாவுக்கு ஏற்கெனவே நீரிழிவு நோய், சிறுநீரகம் செயலிழப்பு மற்றும் இதய கோளாறு போன்ற நோய்கள் இருந்தன. அதனால்தான் அவர் உயிரிழந்தார் என்று மறுத்துள்ளது. கோரோனா விவகாரத்தில் மாநில அரசின் முன்னுக்குப் பின் முரணான செயல்பாடுகள் மக்களிடையே, அதிருப்தியையே ஏற்படுத்தி உள்ளது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00