திருப்பூரில் 180 வடிவங்களிலான முகக் கவசங்கள் உற்பத்தி : பின்னலாடை தொழிலாளர்களின் புது முயற்சி

May 28 2020 6:00PM
எழுத்தின் அளவு: அ + அ -

திருப்பூரில் கொரோனா வைரஸ் காரணமாக, பின்னலாடை உற்பத்தி முடங்கியுள்ள நிலையில், பல வடிவங்களில் முகக் கவசங்கள் தயாரிக்கும் பணியில் ​தொழிலாளர்கள் ஈடுபட்டுள்ளனர்.

கொரோனா வைரஸ் பரவல் காரணமாக, ஐரோப்பியா, அமெரிக்கா, ஆஸ்திரேலியா போன்றநாடுகளில் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டதால் ஆயத்த ஆடை மற்றும் பின்னலாடை விற்பனை பெருமளவு சரியத் தொடங்கியது. இதன் காரணமாக திருப்பூரிலிருந்து இந்த நாடுகளுக்கு அனுப்பப்பட்ட சுமார் 7 ஆயிரத்து 500 கோடி ரூபாய் மதிப்பிலான பின்னலாடை பொருட்கள் தேக்கம் அடைந்தன.

இந்நிலையில், திருப்பூர் பின்னலாடை உற்பத்தியாளர்களுக்கு கை கொடுக்கும் விதமாக முகக் கவசங்கள் உற்பத்தி தொடங்கப்பட்டுள்ளது. முதலில் மருத்துவ ஆடைகளுக்காக, நான்-ஓவன் எனப்படும் போம் துணிகளைக் கொண்டு செய்யப்பட்டு வந்த முகக் கவசங்கள், தற்போது பின்னலாடை மற்றும் ஆயத்த ஆடைகளுக்கு ஏற்ற வடிவங்களில் உற்பத்தி செய்யப்பட்டு வருகின்றன. விருப்ப நடிகர்களின் முகம் பொறித்த முகக் கவசங்கள், இரவில் ஜொலிக்கும் ரேடியம் பிரிண்டிங் முககவசங்கள், காதுகேளாத நபர்களுக்கு உதட்டின் அசைவைக் கொண்டு வார்த்தைகளை கண்டுபிடிக்கும் விதத்தில் முகக் கவசங்கள் என 180 விதமான முகக் கவசங்கள் உற்பத்தி செய்யப்பட்டு வருகின்றன.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00