தென் கொரியாவிலிருந்து மேலும் ஒன்றரை லட்சம் கொரோனா பரிசோதனை கருவிகள் தமிழகம் வருகை - சோதனையை விரைவுப்படுத்த முடிவு

May 26 2020 2:27PM
எழுத்தின் அளவு: அ + அ -

தென் கொரியாவிலிருந்து மேலும் ஒன்றரை லட்சம் கொரோனா பரிசோதனை கருவிகள் தமிழகம் வந்தடைந்துள்ளன. இதையடுத்து சோதனையை விரைவுப்படுத்த தமிழக சுகாதாரத்துறை முடிவு செய்துள்ளது.

தமிழகம் முழுவதும் RT-PCR கருவிகள் மூலம், கொரோனா சோதனை நடத்தப்பட்டு வருகிறது. மாநிலம் முழுவதும் இதுவரை, சுமார் 2 லட்சத்து 17 ஆயிரம் மாதிரிகள் சோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளன.

இதனிடையே, தென்கொரியாவில் இருந்து 10 லட்சம் PCR சோதனை கருவிகளை வாங்க தமிழக அரசு முன்பதிவு செய்தது. அதில், ஏற்கனவே ஒரு லட்சம் சோதனைக் கருவிகள் ஒப்படைக்‍கப்பட்ட நிலையில், மேலும் ஒன்றரை லட்சம் கருவிகள் தமிழகம் வந்தடைந்துள்ளன.

தற்போது தமிழகத்தில் நாள்தோறும் 13 ஆயிரம் கொரோனா பரிசோதனைகள் நடத்தப்பட்டு வருவதாகவும், சோதனையை மேலும் விரைவுப்படுத்த நடவடிக்‍கை மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00