தமிழகத்தில் கொரோனா தொற்று பாதிப்பு எண்ணிக்‍கை 16 ஆயிரத்து 277ஆக அதிகரிப்பு - 111 பேர் உயிரிழப்பு

May 25 2020 10:48AM
எழுத்தின் அளவு: அ + அ -

தமிழகத்தில் நேற்று மேலும் 765 பேர் கொரோனாவால் பாதிக்‍கப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. சென்னையில் ஒரேநாளில் 587 பேர் நோய்த்தொற்றால் பாதிக்‍கப்பட்டுள்ளனர்.

தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்‍கப்படுபவர்களின் எண்ணிக்‍கை நாள்தோறும் அதிகரித்து வருகிறது. நேற்று மேலும் 765 பேருக்‍கு தொற்று உறுதியானதை அடுத்து, பாதிக்‍கப்பட்டவர்களின் எண்ணிக்‍கை 16 ஆயிரத்து 277ஆக அதிகரித்துள்ளது. தமிழகத்தில் மேலும் 8 பேர் உயிரிழந்ததால் பலி எண்ணிக்‍கை 111-ஆக உயர்ந்துள்ளது. சிகிச்சை முடிந்து 833 பேர் வீடு திரும்பியுள்ளனர். இதன்மூலம் வீடு திரும்பியவர்களின் எண்ணிக்‍கை 8 ஆயிரத்து 324ஆக உள்ளது.

சென்னையில் கொரோனா வைரசால் ஒரே நாளில் 587 பேர் பாதிக்‍கப்பட்டுள்ளனர். இதன்மூலம் சென்னையில் நோய்த்தொற்று உள்ளவர்களின் எண்ணிக்‍கை 10 ஆயிரத்து 576ஆக உயர்ந்துள்ளது. செங்கல்பட்டில் 46 பேரும், திருவள்ளூரில் 34 பேரும், காஞ்சிபுரத்தில் 21 பேரும் கொரோனாவால் பாதிக்‍கப்பட்டுள்ளனர்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00