தமிழகத்தில் நாளை முதல் சின்னத்திரை படப்பிடிப்புகள் நடத்த, நிபந்தனைகளுடன் அனுமதி - தமிழக அரசு உத்தரவு

May 21 2020 1:16PM
எழுத்தின் அளவு: அ + அ -
தமிழகத்தில் நாளை முதல் சின்னத்திரை படப்பிடிப்புகளை நடத்த, நிபந்தனைகளுடன் அனுமதி வழங்கி தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

கொரோனா தடுப்பு நடவடிக்கையாக திரைப்படங்கள் மற்றும் சின்னத்திரை படப்பிடிப்புகளை நடத்த தடை விதிக்கப்பட்டிருந்தது. தமிழகத்தில் தற்போது ஊரடங்கில் சில தளர்வுகள் வழங்கப்பட்டுள்ளதால், திரைப்பட தொழிலாளர்களின் நலன் கருதி, படப்பிடிப்புகளை நடத்த அனுமதி வழங்க வேண்டும் என ஃபெப்சி மற்றும் சின்னத்திரை தயாரிப்பாளர்கள் கோரிக்கை விடுத்திருந்தனர். அதன்படி, நாளை முதல் சின்னத்திரை படப்பிடிப்புகளை குறிப்பிட்ட நிபந்தனைகளுடன் நடத்த அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

சுற்றுச்சுவர் உள்ள வீடுகள் மற்றும் அரங்கினுள் மட்டுமே படப்பிடிப்புகளை நடத்த வேண்டும் என்றும், நோய்க்கட்டுப்பாட்டு பகுதிகளில் படப்பிடிப்புகளை நடத்த தடை நீடிப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. நகர்ப்புறங்களில் பொது இடங்களில் படப்படிப்புகளை நடத்தக்கூடாது என்றும், ஊரகப்பகுதிகளில் நோய்க்கட்டுப்பாட்டு பகுதிகளை தவிர, பிற பொது இடங்களில் படப்பிடிப்புகளை நடத்தலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. பார்வையாளர்களை அனுமதிக்க கூடாது என்றும், படப்பிடிப்பு நடைபெறும் இடத்தை கிருமிநாசினி கொண்டு சுத்தம் செய்ய வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. படப்பிடிப்பில் கலந்து கொள்ளும் நடிகர், நடிகைகள் தவிர, தொழில்நுட்ப கலைஞர்கள் அனைவரும் முகக்கவசம் அணிய வேண்டும் என்றும், சமூக இடைவெளியை கடைபிடிக்க வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. நடிகர், நடிகைகள், தொழில்நுட்ப கலைஞர்கள் உள்பட, 20 பேர் மட்டுமே படப்பிடிப்பு பணியில் ஈடுபட வேண்டும் என குறிப்பிடப்பட்டுள்ளது. சென்னையில் படப்பிடப்பு நடத்த மாநகராட்சி ஆணையரிடமும், பிற மாவட்டங்களில் படப்பிடிப்பு நடத்த மாவட்ட ஆட்சியரிடமும் முன் அனுமதி பெற வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • MEDHUVA PESUNGA

    Mon - Fri : 06:57

  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

  • MAKKALODU MAKKAL SELVAR

    Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

  • ACHUM ASALUM

    Mon - Fri : 09:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4153.00 RS. 4361.00
மும்பை Rs. 3975.00 Rs. 4075.00
டெல்லி Rs. 3980.00 Rs. 4100.00
கொல்கத்தா Rs. 4009.00 Rs. 4149.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00