சென்னை, திருவள்ளூர் மாவட்டங்களில் திடீர் கனமழையால் வெப்பம் தணிந்தது - தமிழகத்தின் உள்மாவட்டங்களில் மழைக்‍கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்

Apr 9 2020 6:14PM
எழுத்தின் அளவு: அ + அ -

சென்னை, திருவள்ளூர் மாவட்டங்களில் திடீரென கனமழை பெய்ததால், வெப்பம் தணிந்தது.

தமிழகத்தில் கோடை வெப்பத்தின் தாக்‍கம் தலைதூக்‍கியிருந்த நிலையில், சில மாவட்டங்களில் மழை பெய்தது. சென்னை மற்றும் திருவள்ளூர் மாவட்டங்களில் காலையிலிருந்து வெயில் சுட்டெரித்த நிலையில், மாலையில் மேகம் கருத்து கனமழை பெய்தது.

சென்னையில், அடையாறு, கிண்டி, ஈக்‍காட்டுத்தாங்கல், பாரிமுனை, அரும்பாக்‍கம் உள்ளிட்ட இடங்களில் மழை பெய்தது.

ராயபுரம், காசிமேடு மற்றும் சென்னையின் புறநகர் பகுதிகளிலும், திருவள்ளூர் மாவட்டத்தில் திருவாலங்காடு, திருத்தணி, பூண்டி உள்ளிட்ட இடங்களில் மழையும், ஊத்துக்‍கோட்டையில் ஆலங்கட்டி மழையும் பெய்தது.

இதனிடையே, மேலடுக்‍கு சுழற்சி ஏற்பட்டுள்ளதால் மழை பெய்து வருவதாகவும், அடுத்த 24 மணிநேரத்தில் சேலம், நாமக்‍கல், கரூர், ஈரோடு, கிருஷ்ணகிரி, தருமபுரி உள்ளிட்ட மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00