ஊரடங்கால் வாழ்வாதாரத்தை இழந்து தவிக்கும் நரிக்குறவர் இன மக்கள் : அரசு அதிகாரிகள் எந்தவித உதவியும் செய்யவில்லை என வேதனை

Apr 9 2020 3:26PM
எழுத்தின் அளவு: அ + அ -

ஊரடங்கு உத்தரவால் வாழ்வாதாரத்தை இழந்து, உணவுக்குக்கூட வழியின்றி நரிக்குறவர் இன மக்கள் தவித்து வருகின்றனர்.

சென்னையில், பல்லாவரம் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில், ஏராளமான நரிக்குறவர்கள் வசித்து வருகின்றனர். இவர்கள், பல்லாவரம் வாரச் சந்தை, பேருந்து நிலையம், ரயில் நிலையம் உள்ளிட்ட, மக்கள் அதிகம் கூடும் இடங்களில், ஊசி, பாசிமணி முதலானவற்றை விற்று, பிழைப்பு நடத்தி வந்தனர். பச்சை குத்துவதிலும் திறமையை வாய்ந்த இவர்கள், சித்த மருத்துவம் பற்றியும், இயற்கை மருத்துவம் குறித்தும் அறிந்தவர்கள். அதன் மூலம் வருவாய் ஈட்டி, பிழைப்பு நடத்தி வந்த நரிக்குறவர்கள், தற்போது, 144 தடை உத்தரவால் முடங்கிக் கிடக்கின்றனர்.

அரசின் உத்தரவை மதித்து, வெளியே எங்கும் செல்லாமல் வீட்டிலேயே முடங்கிக் கிடக்கும் இவர்கள், வருமானம் இல்லாததால், வாழ்வாதாரத்தை இழந்து தவிக்கின்றனர். தொடக்க நாட்களில், கையில் இருந்த பணத்தை வைத்து, அத்தியாவசிய தேவைகளை சமாளித்து வந்தனர். ஆனால் தற்போது, சேமிப்பெல்லாம் கரைந்துவிட்டதால், அடுத்த வேளை உணவுக்கு வழியில்லாமல் நிற்கதியாய் நிற்கின்றனர். பசியைப் பொறுக்க முடியாமல் உணவுக்காக கையேந்தினால், தங்களை விரட்டியடிப்பதாகக் வேதனை தெரிவிக்கின்றனர் இந்த நரிக்குறவ மக்கள்.

தங்களின் நிலை இவ்வாறு இருக்க, அரசு தரப்பில் இதுவரை எந்தவித உதவியும் கிடைக்கவில்லை என்று ஆதங்கம் தெரிவிக்கின்றனர்.

ஊரடங்கால் பிழைக்க வழியின்றி, உணவின்றி தவித்து வரும் நரிக்குறவர்கள், அரசு தரப்பிலோ அல்லது தன்னார்வலர்களோ உதவ வேண்டுமென்று கோரிக்கை விடுத்துள்ளனர்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00