கன்னியாகுமரி - கேரள எல்லையில் காய்கறி மூட்டைக்குள் பதுக்கி குட்கா கடத்தல் - ஒரு கோடி ரூபாய் மதிப்புடைய போதை பொருட்கள் பறிமுதல்

Apr 6 2020 2:29PM
எழுத்தின் அளவு: அ + அ -

கன்னியாகுமரி மாவட்டம், களியக்காவிளை பகுதியில் காய்கறி மூட்டைக்குள் பதுக்கி கடத்தி வரப்பட்ட ஒரு கோடி ரூபாய் மதிப்புடைய குட்கா பொருட்களை காவல்துறையினர் பறிமுதல் செய்தனர்.

கொரோனாவைக் கட்டுப்படுத்த அமல்படுத்தப்பட்டுள்ள ஊரடங்கினால், அத்தியாவசியப் பொருள்கள் தவிர்த்து மற்ற கடைகள் அனைத்தும் மூடப்பட்டுள்ளன. கன்னியாகுமரி மாவட்டம் களியக்காவிளையில் காய்கறிகளுக்கு இடையே குட்கா மற்றும் புகையிலை போதைப் பொருள்களை மறைத்துவைத்து கடத்தி, விற்பனை செய்த சம்பவம் அரங்கேறியுள்ளது. ஊரடங்கு காரணமாக மதுக்கடைகளும் மூடப்பட்டுள்ளதால், தடை செய்யப்பட்ட புகையிலைப்பொருட்கள் அதிக அளவில் விற்பனையாவதாக கிடைத்த தகவலை அடுத்து ஆய்வு மேற்கொண்ட காவல்துறையினர், கடைகளில் மறைத்து வைக்கப்பட்டிருந்த குட்கா பொருட்களை பறிமுதல் செய்தனர். அவர்களிடம் மேற்கொண்ட விசாரணையில், காய்கறி மூட்டைக்குள் குட்கா பொருட்களை கடத்தி வந்து அதிக விலைக்கு விற்பனை செய்தது தெரிய வந்தது. இவ்விவகாரத்தில் தொடர்புடைய 5 பேரை கைது செய்த காவல்துறையினர், சுமார் ஒரு கோடி ரூபாய் மதிப்புடைய குட்கா பொருட்களை பறிமுதல் செய்தனர்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00