புதுச்சேரியில் இலவச அரிசிக்‍கு பதில் பணம் வழங்க துணை ஆளுநர் பிறப்பித்த உத்தரவு செல்லும் - சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பு

Feb 21 2020 6:59PM
எழுத்தின் அளவு: அ + அ -

புதுச்சேரியில் ரேஷன் அட்டைதாரர்களுக்கு, அரிசிக்கு பதிலாக பணம் வழங்க வேண்டுமென துணைநிலை ஆளுநர் கிரண்பேடி பிறப்பித்த உத்தரவு செல்லும் என சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

புதுச்சேரியில் பொதுமக்களுக்கு மாதந்தோறும் இலவச அரிசி வழங்க வேண்டும் என முதலமைச்சர் திரு.நாரயணசாமி வலியுறுத்தினார். ஆனால், இலவச அரிசுக்கு பதிலாக, அதற்கு ஈடான பணத்தை பயனாளிகளின் வங்கி கணக்கில் செலுத்தும்படி அம்மாநில துணைநிலை ஆளுநர் கிரண்பேடி உத்தரவிட்டார். இந்த உத்தரவை ஏற்று, புதுச்சேரியில் அரிசிக்கு பதில் பணம் வழங்க மத்திய அரசும் உத்தரவிட்டது. மத்திய அரசின் இந்த உத்தரவை எதிர்த்து புதுச்சேரி முதலமைச்சர் திரு.நாராயணசாமி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கு இன்று நீதிபதி சி.வி.கார்த்திகேயேன் முன்பு விசாரணைக்கு வந்தது. அரிசிக்கு பதில் பணம் வழங்குவது தொடர்பான விவகாரத்தில், குடியரசு தலைவர் அறிவுறுத்தல்படி மத்திய உள்துறை அமைச்சகம் உத்தரவு பிறப்பித்துள்ளதால், அதற்கு புதுச்சேரி அரசு கட்டுப்பட வேண்டும் என குறிப்பிட்ட நீதிபதி, முதலமைச்சர் நாராயணசாமியின் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார். மேலும், இந்த விவகாரத்தில் துணைநிலை ஆளுநரின் உத்தரவு செல்லும் என்றும் உத்தரவிட்டார்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00