நெல் கொள்முதல் நிலையங்களில் முறைகேடு : விவசாயிகளிடம் கூடுதலாக பெற்ற தொகையை திருப்பிக்கொடுக்க ராமநாதபுரம் ஆட்சியர் உத்தரவு

Feb 20 2020 7:17PM
எழுத்தின் அளவு: அ + அ -

விவசாயிகளிடம் இருந்து கூடுதலாக பெறப்பட்ட தொகையை திருப்பி கொடுக்க வேண்டும் என ராமநாதபுரத்தில் நடைபெற்ற விவசாயிகள் குறை தீர்ப்புக் கூட்டத்தின்போது நெல்கொள்முதல் நிலைய அதிகாரிகளுக்கு மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டார்.

ராமநாதபுரம் மாவட்ட விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சியர் வீரராகவ ராவ் தலைமையில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் மாவட்டம் முழுவதிலும் இருந்து ஏராளமான விவசாயிகள் கலந்து கொண்டனர். அப்போது, நெல்லை கொள்முதல் செய்வதற்கு தங்களை அதிகாரிகள் அலைக்கழிப்பதாக விவசாயிகள் குற்றம் சாட்டினர். மூட்டைக்கு 40 கிலோவிற்கு பதிலாக நாற்பத்தி ஒன்றரை கிலோ நெல்லை எடை கேட்பதாகவும், சுமை தூக்கும் தொழிலாளிகளுக்கு தனியாக கூலி கேட்பதாகவும் வேதனை தெரிவித்தனர். இதையடுத்து விவசாயிகளிடம் கூடுதலாக வசூலிக்கப்பட்ட தொகையை உடனடியாக அதிகாரிகள் திரும்ப கொடுக்க வேண்டும் என்றும் விவசாயிகளுக்கு உடனுக்குடன் அவர்களது கணக்கில் பணம் வரவு வைக்கவேண்டும் என்றும் அதிகாரிகளுக்கு மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டார்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00