கும்பகோணத்தில் அரசின் நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் முறைகேடு : அதிகாரிகள் அலைக்‍கழிப்பதாக விவசாயிகள் குற்றச்சாட்டு

Feb 20 2020 3:39PM
எழுத்தின் அளவு: அ + அ -

கும்பகோணத்தில் நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் நடைபெறும் முறைகேடுகளால் விவசாயிகள் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளனர்.

கும்பகோணம், பாபநாசம், திருவிடைமருதூர் உள்ளிட்ட டெல்டா மாவட்ட பகுதிகளில் சம்பா மற்றும் தாளடி நெல் அறுவடைப் பணிகள் தீவிரமடைந்துள்ளன. நல்ல மகசூல் கிடைத்துள்ளதால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ள போதிலும், அரசின் நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் நடைபெற்று வரும் முறைகேடுகளால் அதிர்ச்சி அடைந்துள்ளனர். பாபநாசம், கணபதி அக்ரஹாரம், கபிஸ்தலம் உள்ளிட்ட நேரடி நெல் கொள்முதல் நிலையங்களிலும், சாலையோரங்களிலும் அறுவடை செய்த நெல் மலைபோல் குவித்து வைக்கப்பட்டுள்ளன. நெல் கொள்முதல் செய்யப்படாமல் விவசாயிகள் அலைக்‍கழிக்‍கப்படுவதாக புகார் எழுந்துள்ளது.

ராமநாதபுரம் மாவட்டத்தில் தமிழக அரசு சார்பில் அமைக்கப்பட்டுள்ள நெல் கொள்முதல் நிலையங்களில் முறைகேடு நடப்பதாகவும், இதனால் விவசாயிகள் கடுமையாக பாதிக்கப்பட்டு இருப்பதாகவும் குறைதீர்க்கும் கூட்டத்தில் விவசாயிகள் குற்றச்சாட்டியுள்ளனர். இதனை அறிந்த மாவட்ட ஆட்சியர் வீரராகவ ராவ் நெல் கொள்முதல் நிலையங்களில் விவசாயிகளிடம் கூடுதலாக வசூலிக்கப்பட்ட தொகையை உடனடியாக அதிகாரிகள் திரும்ப அளிக்‍க வேண்டும் என உத்தரவிட்டார்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00