தங்கம் விலை மேலும் அதிகரிப்பு - சவரன் 32 ஆயிரம் ரூபாயை நெருங்குகிறது

Feb 20 2020 1:02PM
எழுத்தின் அளவு: அ + அ -

தங்கத்தின் விலை மேலும் உயர்ந்து வருவதால் சவரன் 32 ஆயிரம் ரூபாயை நெருங்கியுள்ளது.

சென்னையில் இன்று 22 கேரட் ஆபரணத்தங்கம் கிராமுக்‍கு 15 ரூபாயும், சவரனுக்கு 120 ரூபாயும் அதிகரித்துள்ளது. அதன்படி, ஆபரணத் தங்கம், ஒரு கிராம் 3 ஆயிரத்து 980 ரூபாய்க்‍கும், ஒரு சவரன் 31 ஆயிரத்து 840 ரூபாய்க்‍கும் விற்பனையாகிறது. 24 கேரட் தங்கம், ஒரு கிராம் 4 ஆயிரத்து 179 ரூபாய்க்கும், 8 கிராம் 33 ஆயிரத்து 432 ரூபாய்க்‍கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. வெள்ளி கிராமுக்கு 30 காசுகள் அதிகரித்து, ஒரு கிராம் 52 ரூபாய் 10 காசுகளுக்‍கும், கிலோவுக்கு 300 ரூபாய் அதிகரித்து, 52 ஆயிரத்து 100 ரூபாய்க்‍கும் விற்பனை செய்யப்படுகிறது. ஆபரணத்தங்கத்தின் விலை புதிய உச்சமாக 32 ஆயிரத்தை நெருங்கி வருகிறது. இதனால், பொதுமக்கள் கலக்கமடைந்துள்ளனர்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00