நட்சத்திர ஹோட்டல்களுக்கு சொத்து வரி குறைவாக வசூலித்ததால் அரசுக்கு பலகோடி ரூபாய் வருவாய் இழப்பு - லஞ்ச ஒழிப்பு துறை விசாரிக்க கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு

Feb 18 2020 3:53PM
எழுத்தின் அளவு: அ + அ -

நட்சத்திர ஹோட்டல்களுக்கு குறைந்த சொத்து வரி வசூலித்ததால் அரசுக்கு கோடிக்கணக்கான ரூபாய் வருவாய் இழப்பு ஏற்பட்டது தொடர்பாக லஞ்ச ஒழிப்பு துறை விசாரிக்க கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.

சென்னையைச் சேர்ந்த மக்கள் சட்ட உரிமை கழகம் என்ற அமைப்பின் சார்பில் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. ஆறு மாதங்களுக்கு ஒரு முறை, 6 லட்சம் ரூபாய் முதல் 9 லட்சம் ரூபாய் வரை மட்டுமே சொத்து வரி விதிக்கப்படுவதாக தெரிவித்துள்ள மனுதாரர், அதிகாரிகள் லஞ்சம் பெற்று கொண்டு, குறைந்த வரி விதிப்பதால் மாநகராட்சிக்கு கோடிக்கணக்கான ரூபாய் வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார். எனவே, சம்பந்தப்பட்டவர்களுக்கு எதிராக முழுமையான விசாரணை நடத்தும்படி, லஞ்ச ஒழிப்புத் துறைக்கு உத்தரவிட வேண்டும் என மனுவில் கோரப்பட்டுள்ளது. இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள் சத்தியநாராயணன் மற்றும் ஹேமலதா அடங்கிய அமர்வு, வழக்கை மாநகராட்சி சொத்துவரி விவகாரம் தொடர்பாக விசாரித்துவரும் நீதிபதி கிருபாகரன் தலைமையிலான அமர்வில் உள்ள வழக்குடன் சேர்த்து விசாரிக்க பட்டியலிட பரிந்துரைத்தது.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00