தமிழகம் முழுவதும் இறுதி வாக்‍காளர் பட்டியல் வெளியீடு - சுமார் 6 கோடியே 13 லட்சம் வாக்‍காளர்கள் இருப்பதாக தகவல்

Feb 14 2020 7:26PM
எழுத்தின் அளவு: அ + அ -
தமிழகம் முழுவதும் இன்று, இறுதி வாக்காளர் வரைவு பட்டியல் வெளியிடப்பட்டது. சுமார் 6 கோடியே 13 லட்சம் வாக்‍காளர்கள் உள்ளனர்.

தமிழகம் முழுவதும் இன்று, இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டது. மொத்தம் 6 கோடியே 13 லட்சத்து 6 ஆயிரத்து 638 வாக்காளர்கள் உள்ளனர். ஆண்கள் 3 கோடியே 2 லட்சத்து 54 ஆயிரத்து 172 பேரும், பெண்கள் 3 கோடியே 10 லட்சத்து 45 ஆயிரத்து 969 பேரும் உள்ளனர். மூன்றாம் பாலினத்தவர்கள் 6 ஆயிரத்து 497 பேர் உள்ளனர்.

காஞ்சிபுரத்தில் இறுதி வாக்காளர் பட்டியலை மாவட்ட ஆட்சியர் திரு.பொன்னையா வெளியிட்டார். ஆட்சியர் அலுவலகத்தில், அனைத்துக்‍ கட்சி பிரமுகர்கள் முன்னிலையில் இறுதிக்‍கட்ட வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டது. செங்கல்பட்டு மாவட்டத்தை உள்ளடக்‍கிய சட்டமன்றத் தொகுதிகளுக்கும் சேர்த்து வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டது. அதிகபட்சமாக சோழிங்கநல்லூர் தொகுதியில் 6 லட்சத்து 60 ஆயிரத்து 317 வாக்காளர்களும், குறைந்தபட்சமாக செய்யூர் தொகுதியில் 2 லட்சத்து 21 ஆயிரத்து 828 வாக்காளர்களும் உள்ளனர்.

திருவண்ணாமலை மாவட்டத்தில் புதிய வரைவு வாக்காளர் பட்டியலை மாவட்ட வருவாய் அலுவலர் ரத்தினசாமி வெளியிட்டார். திருவண்ணாமலை மாவட்டத்தில் மொத்த வாக்காளர்கள் 20 லட்சத்து 30 ஆயிரத்து 502 பேர் என தெரிவிக்‍கப்பட்டுள்ளது. பார்வையற்ற மாற்றுத்திறனாளிகளுக்கு புதிதாக வாக்காளர் அடையாள அட்டை வழங்கப்பட்டது.

புதுக்கோட்டை மாவட்டத்தில் வாக்காளர் பட்டியலை மாவட்ட ஆட்சியர் உமாமகேஸ்வரி வெளியிட்டார். ஆண் வாக்காளர்கள் 6 லட்சத்து 51 ஆயிரத்து 682 பேரும், பெண் வாக்காளர்கள் 6 லட்சத்து 63 ஆயிரத்து 731 பேரும் உள்ளனர். மூன்றாம் பாலினத்தவர்கள் 37 பேரும் புதிதாக சேர்க்கப்பட்டுள்ளனர்.

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில், வாக்காளர் பட்டியலை மாவட்ட ஆட்சியர் திரு.ராசாமணி வெளியிட்டார். 73 ஆயிரத்து 910 பேர் புதிய வாக்காளர்களாக சேர்க்கப்பட்டுள்ளனர். மாவட்டத்தில் 29 லட்சத்து 91 ஆயிரத்து 923 வாக்‍காளர்கள் உள்ளனர்.

கரூர் மாவட்டத்தில் வாக்காளர் இறுதிப்பட்டியலை மாவட்ட வருவாய் அலுவலர் திரு.ராஜேந்திரன் வெளியிட்டார். மாவட்டத்தில் உள்ள 4 சட்டமன்ற தொகுதிகளில் மொத்தம் 8 லட்சத்து 81 ஆயிரத்து 611 வாக்காளர்கள் உள்ளனர். மாவட்டத்தில் ஆண் வாக்காளர்கள் 4 லட்சத்து 27 ஆயிரத்து 129 பேரும், பெண் வாக்காளர்கள் 4 லட்சத்து 54 ஆயிரத்து 415 பேரும் உள்ளனர்.

திருப்பூர் மாவட்டத்தில் இறுதி வாக்காளர் பட்டியலில், 23 லட்சத்து ஆயிரத்து 481 வாக்காளர்கள் உள்ளனர். ஆண்களைவிட 17 ஆயிரத்து 692 பெண் வாக்காளர்கள் அதிகம் இருப்பதாக, மாவட்ட ஆட்சியர் திரு. விஜய கார்த்திகேயன் தெரிவித்தார். மூன்றாம் பாலினத்தை சேர்ந்தவர்கள் 277 பேர் உள்ளனர். அரசு அலுவலகங்களில் பொதுமக்கள் பார்வைக்காக வாக்காளர் பட்டியல் வைக்கப்பட்டுள்ளது.

கன்னியாகுமரி மாவட்டத்தில் இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டது. மாவட்டத்தில் உள்ள 6 சட்டமன்றத் தொகுதிகளிலும் 7 லட்சத்து 67 ஆயிரத்து 360 ஆண் வாக்காளர்களும், 7 லட்சத்து 61 ஆயிரத்து 613 பெண் வாக்காளர்களும் உள்ளனர். இறுதி வாக்காளர் பட்டியலை மாவட்ட ஆட்சியர் திரு.பிரசாந்த் வடநேரே வெளியிட்டார்.

ஈரோடு மாவட்டத்தில் இறுதி வாக்காளர் பட்டியலை மாவட்ட ஆட்சியர் திரு.சி.கதிரவன் வெளியிட்டார். புதிதாக 42 ஆயிரத்து 920 வாக்காளர்கள் சேர்க்கப்பட்டுள்ளனர். ஆண் வாக்காளர்கள் 9 லட்சத்து 41 ஆயிரத்து 179 பேரும், பெண் வாக்காளர்கள் 9 லட்சத்து 84 ஆயிரத்து 395 வாக்காளர்களும், மூன்றாம் பாலின வாக்காளர்கள் 94 பேரும் உள்ளனர்.

ராமநாதபுரம் மாவட்டத்தில் இறுதி வாக்காளர் பட்டியலை மாவட்ட ஆட்சியர் திரு.வீரராகவராவ் வெளியிட்டார். மாவட்டத்தில் 11 லட்சத்து 36 ஆயிரத்து 569 வாக்காளர்கள் உள்ளனர். ஆண் வாக்காளர்கள் 5 லட்சத்து 67 ஆயிரத்து 307 பேரும், பெண் வாக்காளர்கள் 5 லட்சத்து 69 ஆயிரத்து 193 பேரும், மூன்றாம் பாலின வாக்காளர்கள் 69 பேரும் உள்ளனர்.

திருநெல்வேலி மற்றும் தென்காசி மாவட்டங்களில் ஒருங்கிணைந்த இறுதி வாக்‍காளர் பட்டியலை மாவட்ட ஆட்சித் தலைவர் திருமதி ஷில்பா வெளியிட்டார். மொத்தமுள்ள 10 சட்டமன்றத் தொகுதிகளில் 26 லட்சத்து 33 ஆயிரத்து 426 வாக்‍காளர்கள் உள்ளனர்.

திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள 10 சட்டமன்ற தொகுதிகளுக்கான வரைவு வாக்காளர் பட்டியலை அனைத்துக் கட்சி நிர்வாகிகள் முன்னிலையில் மாவட்ட ஆட்சியர் மகேஸ்வரி ரவிக்குமார் வெளியிட்டார். ஆண் வாக்காளர்களைவிட 29 ஆயிரத்து 148 பேர் பெண் வாக்காளர்கள் என தெரிவித்தார். மாவட்டத்தில் மொத்தம் 16 லட்சத்து 80 ஆயிரத்து 869 ஆண் வாக்காளர்களும், 17 லட்சத்து 10 ஆயிரத்து 287 பெண் வாக்காளர்களும், திருநங்கைகள் 746 பேரும் உள்ளனர்.

விருதுநகர் மாவட்டத்தில், இறுதி வாக்காளர் பட்டியலை மாவட்ட ஆட்சியர் வெளியிட்டார். மாவட்டத்தில் 7 சட்டமன்றத் தொகுதிகளிலும், ஆண் வாக்காளர்களை விட பெண் வாக்காளர்களே அதிகம் உள்ளனர். அதிகபட்சமாக சிவகாசி சட்டமன்றத் தொகுதியில் 2 லட்சத்து 53 ஆயிரத்து 964 வாக்காளர்கள் உள்ளனர். வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க, நீக்க மற்றும் திருத்தம் செய்ய விரும்புவோர், வட்டாட்சியர் அலுவலகங்களில் விண்ணப்பங்களை பெறலாம் என மாவட்ட ஆட்சியர் தெரிவித்தார்.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
 • MEDHUVA PESUNGA

  Mon - Fri : 06:57

 • KELVIGAL AAYIRAM

  Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

 • MAKKALODU MAKKAL SELVAR

  Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

 • ACHUM ASALUM

  Mon - Fri : 09:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4153.00 RS. 4361.00
மும்பை Rs. 3975.00 Rs. 4075.00
டெல்லி Rs. 3980.00 Rs. 4100.00
கொல்கத்தா Rs. 4009.00 Rs. 4149.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00