தங்கை, மகள் கதாபாத்திரங்களில் தடம் பதிக்கும் நிவேதா தாமஸ் நேர்கொண்ட பார்வை தெலுங்கு ரீமேக்கில் நடிக்கிறார்
Jan 27 2020 8:12PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
முன்னணி நடிகர்களின் தங்கை மற்றும் மகள் கதாபாத்திரங்களில், தடம் பதித்து வரும் நடிகை நிவேதா தாமஸ், 'நேர்கொண்ட பார்வை' படத்தின் தெலுங்கு ரீமேக்கில் நடிக்க உள்ளார். சமுத்திரகனி இயக்கிய போராளி படம் மூலம், தமிழ் திரையுலகில் அறிமுகமான நிவேதா தாமஸ், பின்னர் ஜில்லா படத்தில் விஜய்யின் தங்கையாக நடித்தார். பாபநாசம் படத்தில், நடிகர் கமலின் மகளாக நடிகத்த இவர், 4 ஆண்டுகளுக்கு பின், தர்பார் படம் மூலம் ரீ-எண்ட்ரி கொடுத்தார். இப்படத்தில் ரஜினியின் மகளாக நடித்து அனைவரின் பாராட்டையும் பெற்றார்.