72 மணிநேரத்தில் 30 லட்சம் விதைப் பந்துகளை தயாரிக்‍கும் உலக சாதனை முயற்சி - 2,500 மாணவர்கள் பங்கேற்பு

Jan 21 2020 4:03PM
எழுத்தின் அளவு: அ + அ -

உலகிலேயே முதல் முறையாக 72 மணி நேரத்தில், 30 லட்சம் விதைப்பந்துகள் தயாரிக்கும் உலக சாதனை நிகழ்வை, ராமநாதபுரத்தில் மாவட்ட ஆட்சியர் தொடங்கி வைத்தார்.

ராமநாதபுரம் மாவட்ட நிர்வாகம் மற்றும் தனியார் அமைப்பும் இணைந்து, மாவட்டத்தை பசுமையாக்‍கும் முயற்சியில் இறங்கியுள்ளன. இதன் ஒரு பகுதியாக 72 மணி நேரத்தில், ஒரு கோடியே 20 லட்சம் விதைகளைக் கொண்டு, 30 லட்சம் விதைப்பந்துகளை உருவாக்கும் சாதனை நிகழ்வு, தனியார் பள்ளியில் தொடங்கியது. மாவட்ட ஆட்சியர் திரு. வீரராகவ ராவ் தலைமையில் நடைபெற்ற இந்தநிகழ்ச்சியில், பல்வேறு அரசு மற்றும் தனியார் பள்ளி மாணவர்கள் இரண்டாயிரத்து 500 பேர் ஒன்றிணைந்து, இப்பணியில் ஈடுபட்டுள்ளனர்.

சீத்தாப்பழம், விளாம்பழம், கொய்யாப்பழம், சரக்கொன்றை, மயில்கொன்றை மற்றும் பூவரசன் உள்ளிட்ட மர விதைகள் இதில் பயன்படுத்தப்பட்டுள்ளன. இதனை, எலைட் வேர்ல்டு ரெக்கார்ட்ஸ், ஏசியன் ரெக்கார்ட்ஸ் அகாடமி, இந்தியன் ரெக்கார்ட்ஸ் அகாடமி, மற்றும் தமிழன் புக் ஆப் ரெக்கார்ட்ஸ் உள்ளிட்டவை நேரில் ஆய்வு செய்து சான்றளிக்க உள்ளன.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00