வருமான வரி மோசடி தொடர்பான வழக்கில் நேரில் ஆஜராவதிலிருந்து விலக்கு அளிக்கக்கோரி கார்த்தி சிதம்பரம் தாக்கல் செய்த மனு - அவசர வழக்காக விசாரிக்க சென்னை உயர் நீதிமன்றம் மறுப்பு

Jan 20 2020 8:31PM
எழுத்தின் அளவு: அ + அ -

வருமான வரி மோசடி தொடர்பான வழக்கில் நேரில் ஆஜராவதிலிருந்து விலக்கு அளிக்கக்கோரி கார்த்தி சிதம்பரம் மற்றும் அவரது மனைவி ஸ்ரீநிதி ஆகியோர் தாக்கல் செய்த மனுக்களை அவசர வழக்காக விசாரிக்க சென்னை உயர் நீதிமன்றம் மறுத்து விட்டது.

முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரத்தின் மகனும், காங்கிரஸ் எம்.பி.யுமான கார்த்தி சிதம்பரம் மற்றும் அவரது மனைவி ஸ்ரீநிதி ஆகிய இருவரும், பழைய மாமல்லபுரம் சாலையில் முட்டுக்காட்டில் உள்ள அவர்களது சொத்துகளை கடந்த 2015-ம் ஆண்டு அக்னி எஸ்டேட்ஸ் பவுன்டேசன் என்ற நிறுவனத்துக்கு விற்பனை செய்துள்ளனர்.

இந்த விற்பனை மூலம் பெற்ற 7 கோடியே 73 லட்சம் ரூபாயை வருமான வரித்துறையிடம் கணக்கு காட்டாமல் மறைத்து வரிஏய்ப்பு செய்ததாக, கார்த்தி சிதம்பரம், ஸ்ரீநிதி ஆகியோர் மீது வருமான வரித்துறை வழக்கு தொடர்ந்தது.

இந்த வழக்கு, எம்.பி. எம்.எல்.ஏ.க்கள் மீதான வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்தில் விசாரணையில் உள்ளது. குற்றச்சாட்டுகள் பதிவுக்காக நாளை இருவரும் நேரில் ஆஜராக வேண்டுமென சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டிருந்த நிலையில், சிறப்பு நீதிமன்ற விசாரணைக்கு தடை விதிக்கவும், நேரில் ஆஜராவதில் இருந்து விலக்களிக்கவும் கோரி, கார்த்தி சிதம்பரம் மற்றும் அவரது மனைவி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தனர். இந்த வழக்கை அவசர வழக்காக உடனே விசாரணைக்கு எடுக்க வேண்டுமென கார்த்தி சிதம்பரம் தரப்பில் முறையிடப்பட்டது. இதை ஏற்க மறுத்த நீதிபதி சுந்தர், இந்தவழக்கு விசாரணைக்காக பட்டியலிடப்பட்டால் விசாரிக்கப்படும் என தெரிவித்தார்.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00