காவல் உதவி ஆய்வாளர் கொலை செய்யப்பட்ட வழக்‍கு - உபா சட்டத்தின் கீழ் 5 பேர் கைது செய்யப்பட்டு பாளையங்கோட்டை சிறையிலடைப்பு

Jan 20 2020 8:25PM
எழுத்தின் அளவு: அ + அ -

களியக்காவிளையில் சிறப்பு உதவி ஆய்வாளர் கொல்லப்பட்ட வழக்கில், தென்காசியைச் சேர்ந்த 5 பேர் உபா சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கன்னியாகுமரி மாவட்டம் களியக்காவிளையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு காவல்துறை சிறப்பு உதவி ஆய்வாளர் வில்சன் சுட்டுக் கொலை செய்யப்பட்டார். இந்த வழக்கில், சந்தேகத்திற்கிடமான 9 பேரை, கடந்த 13-ம் தேதி கைது செய்த போலீசார் விசாரணை மேற்கொண்டு வந்தனர். இந்த நிலையில், விசாரணை கைதியாக இருந்த தென்காசியை முஹம்மது இஸ்மாயில், செய்யது ராஜா ஹரிம் நவாஸ், அல்ஹபிப், அப்துல் காதர், முஹமது ஷாக்காரியா ஆகிய 5 பேரும் சட்டவிரோத செயல்பாடுகள் கட்டுப்பாடு சட்டம் எனப்படும் உபா சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு, பாளையங்கோட்டை மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

இதனிடையே, இந்த வழக்கில் கைது செய்யப்பட்ட முக்கிய குற்றவாளிகளான அப்துல் சமீம், தவுபீக் இருவரும் நாகர்கோவில் குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் போலீசார் இன்று ஆஜர் படுத்தினர். இருவருக்‍கும் நீதிமன்றக்‍ காவல் தொடர்வதாக அறிவித்த மாவட்ட முதன்மை நீதிபதி அருள்முருகன், நாளை 3 மணிக்‍கு தீர்ப்பு ஒத்தி வைப்பதாக அறிவித்தார். இதனைத் தொடர்ந்து அப்துல் சமீம், தவுபீக்‍ இருவரும் பலத்த பாதுகாப்புடன் பாளையங்கோட்டை சிறைக்‍கு அழைத்து செல்லப்பட்டனர்.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00