காணும் பொங்கலை கொண்டாட சுற்றுலாத் தலங்களுக்‍கு படையெடுத்த மக்‍கள் : கூட்ட நெரிசலால் போக்குவரத்து கடும் பாதிப்பு

Jan 17 2020 9:05PM
எழுத்தின் அளவு: அ + அ -

காணும் பொங்கலை கொண்டாடுவதற்காக தமிழகத்தின் முக்‍கிய சுற்றுலாத் தலங்களில் பொதுமக்‍கள், சுற்றுலாப் பயணிகள் அதிக அளவில் குவிந்தனர்.

பொங்கல் விழாவின் நிறைவாக காணும் பொங்கல் இன்று உற்சாகமாகக்‍ கொண்டாடப்பட்டது. ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் அருகே கொடிவேரி தடுப்பணை அருவிக்கு, ஆயிரக்‍கணக்‍கான சுற்றுலாப் பயணிகள் குவிந்தனர். அருவியில் குளித்தும், பூங்காவில் விளையாடியும், பரிசல் பயணம் செய்தும் உற்சாகமடைந்தனர்.

காணும் பொங்கலை முன்னிட்டு ராமநாதபுரம் மாவட்ட கடற்கரைப் பகுதியில் மக்‍கள் குவிந்தனர். அரியமான் கடற்கரை, தேவிபட்டினம், சேதுக்கரை, பாம்பன் பாலம் உள்ளிட்ட இடங்களில் செல்பி எடுத்து சுற்றுலாப் பயணிகள் மகிழ்ந்தனர். தனுஷ்கோடியில் ஒரே நேரத்தில் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வாகனங்களில் சுற்றுலா பயணிகள் வருகை தந்ததால் கூட்ட நெரிசல் ஏற்பட்டு போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே, சோழர்கால புகழ்பெற்ற கங்கைகொண்ட சோழபுரத்தில் ஏராளமான பொதுமக்கள் மற்றும் வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் தங்கள் குடும்பத்தினருடன் வருகை தந்தனர். பூங்காக்களில் குழந்தைகளுடன் உற்சாகமாக விளையாடினர் பொழுதைக்‍ கழித்தனர்.

கடலூர் மாவட்டம் பிச்சாவரம் சுற்றுலா மையத்தில், ஏராளமானோர் நீண்ட வரிசையில் காத்திருந்து படகு சவாரி செய்து மகிழ்ந்தனர். குடிநீர், உணவக வசதி போன்றவை இல்லாததால் சுற்றுலாப் பயணிகள் கடும் அவதிக்குள்ளாகினர். போதிய அடிப்படை வசதிகளை செய்து தர கோரிக்‍கை விடுத்துள்ளனர்.

திருவள்ளூர் மாவட்டம் பழவேற்காடு பகுதிக்‍கு சுற்றுலாப் பயணிகள் அதிக அளவில் வருகை தந்தனர். வங்காள விரிகுடா கடற்கரை, டச்சு கல்லறை, கலங்கரை விளக்கம், மரக்கட்டையால் உருவான மகிமை மாதா தேவாலயம் உள்ளிட்டவற்றை சுற்றுலாப் பயணிகள் கண்டு ரசித்தனர். சுற்றுலா பயணிகள் வருகையால் பழவேற்காடு மீன் சந்தை களைகட்டியது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00