ராமநாதபுரம் மாவட்டத்தில் விபத்தில் உயிரிழந்த இளைஞரின் உடல் உறுப்பு தானத்தால் 7 பேர் பயன் பெற்றனர்

Jan 17 2020 6:05PM
எழுத்தின் அளவு: அ + அ -
ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியில் மூளை சாவு அடைந்த இளைஞரின் உடல் உறுப்புகள் ஏழு பேருக்கு தானமாக அளிக்கப்பட்டது.

பரமக்குடியை அடுத்த காந்தி நகரைச் சேர்ந்தவர் சரத்குமார். இவர் சிவகங்கையில் பணிபுரிந்துவிட்டு இருசக்‍கர வாகனத்தில் வீடு திரும்பிக்‍ கொண்டிருந்தபோது, நிலை தடுமாறி கீழே விழுந்ததில், தலையில் பலத்த காயம் ஏற்பட்டதாகக்‍ கூறப்படுகிறது. உடனடியாக அவர் மருத்துவமனையில் அனுமதிக்‍கப்பட்டு அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. ஆனால், சிகிச்சை பலன் அளிக்‍கவில்லை என்றும், சரத்குமார் மூளைச்சாவு அடைந்ததாகவும் மருத்துவர்கள் தெரிவித்தனர். இதனையடுத்து, சரத்குமாரின் உடல் உறுப்புகளை தானம் செய்ய அவரது பெற்றோர் முன்வந்ததால், மருத்துவமனை நிர்வாகம் சரத்குமாரின் எட்டு உடல் உறுப்புகளை ஏழு பேருக்கு தானமாக வழங்க ஏற்பாடு செய்தது. மகன் இறந்த நிலையிலும் மற்றவர்கள் நலனுக்காக உடல் உறுப்புக்களை தானம் செய்த சரத்குமாரின் பெற்றோருக்கு, உடல் உறுப்பை தானம் பெற்றவர்களும், பொதுமக்களும் நன்றி தெரிவித்தனர்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
 • MEDHUVA PESUNGA

  Mon - Fri : 06:57

 • KELVIGAL AAYIRAM

  Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

 • MAKKALODU MAKKAL SELVAR

  Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

 • ACHUM ASALUM

  Mon - Fri : 09:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4153.00 RS. 4361.00
மும்பை Rs. 3975.00 Rs. 4075.00
டெல்லி Rs. 3980.00 Rs. 4100.00
கொல்கத்தா Rs. 4009.00 Rs. 4149.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00