முதலமைச்சர் ஜெயலலிதா தொடங்கி வைத்த அருங்காட்சியக உலா ரதம் - திருச்சி மாவட்ட மாணவ - மாணவிகளிடம் மிகுந்த வரவேற்பு

Sep 2 2014 12:15PM
எழுத்தின் அளவு: அ + அ -

தமிழர் கலை, பண்பாடு மற்றும் கலாச்சாரத்தை அறிந்துகொள்ளும் வகையில், முதலமைச்சர் செல்வி ஜெயலலிதா தொடங்கி வைத்த அருங்காட்சியக உலா ரதம், திருச்சி மாவட்ட மாணவ - மாணவிகளிடம் மிகுந்த வரவேற்பைப் பெற்றுள்ளது.

பண்டைய வரலாறு மற்றும் கலைப் பொக்கிஷங்களை பாதுகாக்கும் அருங்காட்சியகங்கள், தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இயங்கி வருகின்றன. அதனை நாள்தோறும் ஏராளமானோர் பார்வையிட்டு வருகின்றனர். அருங்காட்சியகத்தை தேடிச் சென்று பார்வையிட வாய்ப்பு கிடைக்காத மாணவ - மாணவியர், தமிழரின் கலை, பண்பாடு, கலாச்சாரத்தை அறிந்துகொள்ளும் வகையில், அருங்காட்சியக உலா ரதம் எனும் வாகனத்தை, முதலமைச்சர் செல்வி ஜெயலலிதா, கடந்த ஜுன் 27-ம் தேதி தொடங்கி வைத்தார். இந்த ரதம் சென்னையில் பல்வேறு பகுதிகளில் சுற்றுப் பயணம் செய்தது. அந்த வாகனத்தில் அமைக்கப்பட்டிருந்த பண்டைய வரலாற்றின் பெருமைகளை மாணவர்கள் எளிதாக அறிந்துகொண்டனர்.

இதனையடுத்து, அருங்காட்சியக உலா ரதம் திருச்சி சென்றடைந்தது. ஸ்ரீரங்கம் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில், அருங்காட்சியக உலா ரதத்தை, அரசு தலைமைக் கொறடா திரு. ஆர். மனோகரன் தொடங்கி வைத்தார். உலா ரதத்தில் அமைக்கப்பட்டிருந்த தொல்லியல், மானுடவியல், நாணயவியல், விலங்கியல், தாவரவியல் உள்ளிட்ட பல்வேறு அம்சங்களை விளக்கும் வகையில் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது, மாணவர்களிடம் மிகுந்த வரவேற்பைப் பெற்றுள்ளது.

வரும் 12-ம் தேதி வரை, திருச்சி மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில், சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் அந்த ரதத்தை, காலை முதல் மாலை வரை மாணவர்கள் பார்வையிட ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. பள்ளியைத் தேடி வந்து, பழம்பெருமைகளை விளக்கும் அருங்காட்சியக உலா ரதம், மாணவர்களிடம் மிகுந்த வரவேற்பைப் பெற்றுள்ளது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00