சம்பா சாகுபடிக்குத் தேவையான விதை நெல், உரம் போதிய அளவு கையிருப்பு - திருவாரூர் மாவட்ட விவசாயிகளுக்கு உடனடியாக வழங்க ஏற்பாடு

Aug 27 2014 2:41PM
எழுத்தின் அளவு: அ + அ -

திருவாரூர் மாவட்ட தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கங்களில், சம்பா சாகுபடிக்கு தேவையான விதைநெல் மற்றும் உரங்கள் போதிய அளவு இருப்பு வைக்கப்பட்டு, விவசாயிகளுக்கு வழங்கப்பட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

காவிரி டெல்டா பாசன மாவட்டங்களில், கடைமடை மாவட்டமான திருவாரூர் மாவட்டம் முற்றிலும் விவசாயத்தை சார்ந்துள்ள மாவட்டமாகும். இந்த மாவட்ட விவசாயிகளின் நலன் காக்க பல்வேறு நடவடிக்கைகளை முதலமைச்சர் செல்வி ஜெயலலிதா மேற்கொண்டு வருகிறார். 12 கோடி ரூபாய் செலவில் பாசனக்கால்வாய்கள் தூர்வாரப்பட்டு கடைமடைப் பகுதி வரை தண்ணீர் பாய நடவடிக்கை, குறுவை சாகுபடிக்காக நூறு சதவீத மானியத்தில் சிறப்பு தொகுப்புத் திட்டம், சம்பா சாகுபடிக்குத் தேவையான விதைநெல், உரம் மற்றும் இடுபொருட்களை மானியத்தில் வழங்கி வேளாண் உற்பத்தியை பெருக்குதல் என பல்வேறு நடவடிக்கைகளை முதலமைச்சர் செல்வி ஜெயலலிதா மேற்கொண்டு வருகிறார். இதன் அடிப்படையில் நடப்பு சம்பா சாகுபடி இலக்காக, திருவாரூர் மாவட்டத்தில், ஒரு லட்சத்து 44 ஆயிரம் ஹெக்டேர் நிலப் பரப்பு நிர்ணயிக்கப்பட்டு, இலக்கினை எட்ட அனைத்து நடவடிக்கைகளையும் மாவட்ட நிர்வாகம் மேற்கொண்டுள்ளது. அனைத்து தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கங்களிலும், DAP, யூரியா மற்றும் பொட்டாஷ் உரங்களும், விதைநெல்லும் போதிய அளவு இருப்பு வைக்கப்பட்டு, விவசாயிகளுக்கு தட்டுப்பாடின்றி கிடைக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00