தமிழர்களின் தனிப்பெரும் தலைவரான முதலமைச்சர் ஜெயலலிதாவின் புகழுக்கு களங்கம் விளைவிப்பதை ஏற்க முடியாது என அ.இ.அ.தி.மு.க. தொண்டர்கள், பொதுமக்கள் ஆவேசம் - தமிழகம் முழுவதும் ஆர்ப்பாட்டம்

Aug 2 2014 10:00AM
எழுத்தின் அளவு: அ + அ -

இலங்கை பாதுகாப்புத் துறை அமைச்சகத்தின் இணையதளத்தில் வெளியிடப்பட்ட அவதூறு கட்டுரைக்கு கடும் கண்டனம் தெரிவித்து, சென்னையில் உள்ள இலங்கை தூதரகத்தை முற்றுகையிட்டு, அ.இஅ.தி.மு.க. சார்பில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் கலந்துகொண்டு ஆயிரக்கணக்கான அ.இ.அ.தி.மு.க. நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள், இலங்கை அரசுக்கும், அதிபர் ராஜபக்சேவுக்கு எதிராகவும் முழக்கமிட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள இலங்கை தூதரகத்தை முற்றுகையிட்டு அ.இ.அ.தி.மு.க. சார்பில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் அ.இ.அ.தி.மு.க. முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் திரு. பாலகங்கா, தென்சென்னை தெற்கு மாவட்டச் செயலாளர் திரு. விருகை ரவி, சட்டமன்ற உறுப்பினர் திரு. வி.பி. கலைராஜன் மற்றும் ஆயிரக்கணக்கான அ.இ.அ.தி.மு.க. தொண்டர்கள் கலந்துகொண்டனர். இலங்கை பாதுகாப்புத் துறையின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் முதலமைச்சர் குறித்து அவதூறாக வெளியிடப்பட்ட செய்திக்கு கடும் கண்டனம் தெரிவித்து, அ.இ.அ.தி.மு.க. நிர்வாகிகள் முழக்கங்களை எழுப்பினர்.

இதேபோல் கோயம்பேட்டில் தமிழ்நாடு வணிகர் சங்கப் பேரவை சார்பில், இலங்கை அரசாங்கத்தைக் கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்றது. பேரவையின் தலைவர் திரு. வெள்ளையன் தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில், இலங்கை அதிபர் ராஜபக்சேவின் உருவப்பொம்மையை எரித்த நிர்வாகிகள், இலங்கை அரசுக்கு எதிராக முழக்கங்களை எழுப்பினர்.

தமிழக முதலமைச்சர் பற்றி அவதூறு கட்டுரை வெளியிட்ட இலங்கை அரசு மற்றும் அந்நாட்டு அதிபர் ராஜபக்சேவை கண்டித்து, தமிழ்நாடு யூனியன் ஆஃப் ஜெர்னலிஸ்ட் சார்பில், சென்னையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இதேபோல் மதுரை, தேனி கிருஷ்ணகிரி, விருதுநகர், ஈரோடு, நெல்லை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் அ.இஅ.தி.மு.க. நிர்வாகிகள் மற்றும் பல்வேறு தமிழ் அமைப்புகளைச் சேர்ந்தவர்களும் தொடர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.



தலைவர்கள் கண்டனம்

தமிழக முதலமைச்சர் மற்றும் இந்தியப் பிரதமருக்கு அவதூறு ஏற்படும் வகையில் இலங்கை ராணுவ அமைச்சகத்தின் இணையதளத்தில் வெளியான கட்டுரை கண்டிக்கத்தக்கது என பல்வேறு அரசியல் கட்சிகளின் தலைவர்களும், பொதுமக்களும், கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

இலங்கை ராணுவ அமைச்சகத்தின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ள ஒரு கட்டுரையில், இலங்கை கடற்படையால் பிடித்துச் செல்லப்படும் மீனவர்களை விடுவிப்பது தொடர்பாக தமிழக முதலமைச்சர் செல்வி ஜெயலலிதா, பிரதமருக்கு எழுதும் கடிதங்கள் குறித்து மிகவும் மோசமான வகையில் விமர்சனம் செய்யப்பட்டிருந்தது. இலங்கை அரசின் இந்தச் செயலுக்கு பல்வேறு அரசியல் கட்சித்தலைவர்களும், பொதுமக்களும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

இலங்கை ராணுவ இணையதளத்தில் வெளியான அவதூறு கட்டுரை கண்டிக்கத்தக்கது என்றும், இதற்கு மத்திய அரசு, தனது கடுமையான எதிர்ப்பை இலங்கை அரசிடம் தெரிவிக்க வேண்டும் என்றும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய செயலாளர் திரு. D.ராஜா தெரிவித்துள்ளார்.

இலங்கை அரசின் இணையதளத்தில், முதலமைச்சர் செல்வி ஜெயலலிதாவை சிறுமைப்படுத்தும் வகையில் சுட்டிக்காட்டியிருப்பது வன்மையாக கண்டிக்கத்தக்கது. பாரத பிரதமர் இதற்கு நேரடியாக இலங்கை அரசுக்கு எச்சரிக்கை விடவேண்டும் என சமத்துவ மக்கள் கட்சித்தலைவர் திரு. சரத்குமார் கண்டனம் தெரிவித்துள்ளார்.

தமிழக மீனவர்கள் பிரச்னைக்கு, தமிழக முதலமைச்சர் தொடர்ந்து, பிரதமருக்கு கடிதங்கள் எழுதுவதுடன், கச்சத்தீவை மீட்கவேண்டியதன் அவசியம் குறித்தும் குறிப்பிட்டு வருவதாக தெரிவித்துள்ள திரு. சரத்குமார், இதனை கொச்சைப்படுத்தும் இலங்கை அரசின் செயலை சமத்துவ மக்கள் கட்சி சார்பிலும், தமிழக மக்கள் சார்பிலும் கண்டிப்பதாக குறிப்பிட்டுள்ளார்.

இலங்கை அரசின் அராஜகச் செயலுக்கு தமிழக வாழ்வுரிமைக் கட்சித்தலைவர் திரு. வேல்முருகன் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

முதலமைச்சரை இழிவுபடுத்தும் இலங்கை அரசின் செயல் கண்டிக்கத்தக்கது. இலங்கை அரசின் இந்த செயல் கொந்தளிப்பை ஏற்படுத்துகிறது. இலங்கை அரசின் இந்த செயல் கண்ணியமற்ற செயல். மீனவர் நலன் காக்கவே, முதலமைச்சர் செல்வி ஜெயலலிதா இதுவரை பிரதமருக்கு 11 முறை கடிதம் எழுதியுள்ளார் என பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் குறிப்பிட்டுள்ளார்.

இலங்கை அரசின் செயல்பாடு, கேவலமான, வக்கிர எண்ணம் படைத்த மன்னிக்க முடியாத வன்மையான கண்டனத்துக்கு உரியது. இலங்கை சிறையில் வாடும் தமிழக மீனவர்களின் கண்ணீரைத் துடைக்கவும், அவர்களின் வாழ்வாதாரத்தை மீட்டெடுக்கவுமே முதலமைச்சர் கடிதம் எழுதுகிறார். ஏழரை கோடி தமிழ் மக்களின் உணர்வுகளை கடிதமாக எழுதும் முதலமைச்சரின் எண்ணத்தை கொச்சைப்படுத்துவது கண்டிக்கத்தக்கது ம.தி.மு.க. பொதுச் செயலாளர் திரு. வைகோ தெரிவித்துள்ளார்.

அரசியல் மாச்சரியங்களுக்கு அப்பாற்பட்டு, எந்த இயக்கத்தைச் சேர்ந்தவர்களாக இருந்தாலும், தமிழக முதலமைச்சர் தமது கடமையை செய்திருப்பதை இலங்கை கொச்சை படுத்தியிருப்பதை ஏற்றுக் கொள்ள முடியாது. இது கடும் ஆட்சேபத்திற்குரியது. வன்மையாகக் கண்டிக்கத்தக்கது என காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர் திரு. ஞான தேசிகன் தனது எதிர்ப்பை தெரிவித்துள்ளார்.

இதேபோன்று தமிழர் தேசிய முன்னணி தலைவர், திரு. பழ. நெடுமாறன், இந்திய தேசிய முஸ்லிம் லீக் கட்சியின் மாநிலத் தலைவர் திரு. Y. ஜவஹர் அலி, கொங்கு நாடு மக்கள் தேசிய கட்சி பொதுச் செயலாளர், மூவேந்தர் முன்னேற்றக் கழகம், புரட்சிபாரதம், தமிழக மக்கள் முன்னேற்றக் கழகம், இந்து மக்கள் கட்சி உள்ளிட்ட பல்வேறு கட்சிகளின் தலைவர்களும், பொதுமக்களும் இலங்கை அரசுக்கு தங்களது கடும் கண்டனத்தைத் தெரிவித்துள்ளனர்.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00