சிவகங்கை தொகுதியில் பொதுமக்கள் ஆதரவு இல்லாததால் ப.சிதம்பரத்தின் மகன் கார்த்திக் சிதம்பரம் விரக்தி - வாக்காளர்களை விலைக்கு வாங்க ஆயிரக்கணக்கில் பணம் வழங்கியது, வீடியோ ஆதாரத்துடன் தேர்தல் அதிகாரியிடம் புகார்

Apr 23 2014 3:47PM
எழுத்தின் அளவு: அ + அ -

சிவகங்கை மக்களவைத் தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளர் கார்த்திக் சிதம்பரத்திற்கு தோல்வி பயம் ஏற்பட்டதையடுத்து, வாக்காளர்களுக்கு காங்கிரஸார் ஆயிரக்கணக்கான ரூபாய் பணம் வழங்கியுள்ளது தொடர்பாக வீடியோ ஆதாரத்துடன் தேர்தல் அதிகாரியிடம் புகார் வழங்கப்பட்டுள்ளது. பொதுமக்களின் ஆதரவு கிடைக்காததால் ஏற்பட்ட விரக்தியில் வாக்காளர்களை கார்த்திக் சிதம்பரம் தரக்குறைவாக பேசியுள்ளது, காங்கிரஸ் கட்சியினரிடம் பீதியை ஏற்படுத்தியுள்ளது.

சிவகங்கை மக்களவைத் தொகுதியில் மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரத்தின் மகன் கார்த்திக் சிதம்பரம், காங்கிரஸ் சார்பில் போட்டியிடுகிறார். அவருக்கு ஆதரவாக ப.சிதம்பரம் தொகுதி முழுவதும் கிராமம் கிராமமாக சென்று பிரச்சாரத்தில் ஈடுபட்டபோது, பொதுமக்கள் மட்டுமின்றி காங்கிரஸ் கட்சியினர் கூட அதிகளவில் ஆர்வம் காட்டவில்லை. இதனால், பெரும்பாலான இடங்களில் பத்து பதினைந்து பேர் மட்டுமே ப.சிதம்பரத்தின் பிரச்சாரத்திற்கு வந்திருந்தனர். பொதுமக்களிடம் ஆதரவு கிடைக்காததால், தோல்வி பயத்தில் தவித்த கார்த்திக் சிதம்பரம், வாக்காளர்களை விலைக்கு வாங்க தீர்மானித்துள்ளதாக தகவல்கள் வெளியாகி பரபரப்பு நிலவிய சூழலில், காரைக்குடி அருகே பள்ளத்தூர் கிராமத்தில் வாக்காளர்கள் ஒவ்வொருவருக்கும் தலா ஆயிரம் ரூபாய் வீதம் காங்கிரஸார் பணம் பட்டுவாடா செய்த காட்சிகள், வீடியோவில் பதிவு செய்யப்பட்டுள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கார்த்திக் சிதம்பரத்திற்கு வாக்களிக்க வற்புறுத்தி காங்கிரஸ் பணம் பட்டுவாடா செய்த வீடியோ காட்சியை ஆதரமாக கொண்டு, அவரின் மீது தேர்தல் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமுக ஆர்வலர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர். இதனிடையே, கோடிக்கணக்கில் பணம் செலவு செய்தும், கார்த்திக் சிதம்பரம் வாக்கு சேகரித்த இடங்களில் எல்லாம் காங்கிரஸுக்கு பொதுமக்கள் ஆதரவளிக்க முன்வரவில்லை. இதனால் விரக்தியடைந்த கார்த்திக் சிதம்பரம், வாக்காளர்களை தரக்குறைவாக விமர்சனம் செய்தது, பொதுமக்களை மட்டுமின்றி காங்கிரஸ் தொண்டர்களையே முகம் சுளிக்க வைத்தது.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00