பெரம்பலூரில், இந்திய ஜனநாயகக் கட்சித் தலைவர் பாரிவேந்தரின் நிறுவனத்திலிருந்து, வாக்காளர்களுக்கு பணம் பட்டுவாடா - 3 கோடி ரூபாய் பணம் பட்டுவாடா செய்த தனியார் அரிசி ஆலைக்கு சீல்

Apr 24 2014 2:15PM
எழுத்தின் அளவு: அ + அ -

பெரம்பலூர் தொகுதி பாரதிய ஜனதா கூட்டணி வேட்பாளரும், இந்திய ஜனநாயகக் கட்சித் தலைவருமான பாரிவேந்தரின் நிறுவனத்திலிருந்து, வாக்காளர்களுக்கு பணம் பட்டுவாடா செய்யப்பட்டிருப்பது அம்பலமாகியுள்ளது. இதற்காக ஒரு தனியார் அரிசி ஆலைக்கு, பலகோடி ரூபாய் பரிவர்த்தனை செய்யப்பட்டிருப்பது தெரியவந்ததால், அந்த ஆலைக்கு தேர்தல் அதிகாரிகள் சீல் வைத்துள்ளனர்.

இந்திய ஜனநாயகக் கட்சியின் தலைவரான பாரிவேந்தர், பாரதிய ஜனதா கூட்டணி சார்பில் பெரம்பலூர் மக்களவைத் தொகுதியில் போட்டியிடுகிறார். அவருக்கு சொந்தமான நிறுவனத்திலிருந்து, திருச்சி - மதுரை தேசிய நெடுஞ்சாலையில், கள்ளிக்குடியில் உள்ள ஒரு தனியார் அரிசி ஆலை வங்கிக் கணக்கில், நேரடியாக பணம் பரிவர்த்தனை நடைபெற்று வந்துள்ளது. கடந்த 17-ம் தேதி முதல், நேற்றுவரை பல்வேறு நபர்களின் பெயர்களில் வரவு வைக்கப்பட்டு சுமார் 3 கோடி ரூபாய் பணம், வாக்காளர்களுக்கு விநியோகம் செய்யப்பட்டுள்ளதாக ரகசிய தகவல், தேர்தல் அதிகாரிகளுக்கு கிடைத்தது.

இதனையடுத்து, அந்த அரிசி ஆலைக்கு நேற்றிரவு சென்று அதிரடி சோதனையில் ஈடுபட்ட தேர்தல் பறக்கும் படையினர், முறையான செலவினக் கணக்கு இல்லாததோடு, உரிய ஆவணங்களின்றி கோடிக்கணக்கான ரூபாய் செலவழிக்கப்பட்டுள்ளதை கண்டுபிடித்தனர். தொடர் விசாரணையில், பாரிவேந்தருக்கு ஓட்டுக்களைப் விலைக்கு வாங்குவதற்காக கோடிக்கணக்கான ரூபாய் முறைகேடாக செலவு செய்யப்பட்டிருப்பது தெரியவந்ததையடுத்து, தேர்தல் பறக்கும் படையினர், அந்த அரிசி ஆலைக்கு நள்ளிரவில் சீல் வைத்தனர். தேர்தல் விதிமுறைகளை மீறி செயல்பட்டது குறித்து, தொடர் விசாரணையிலும் தேர்தல் அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர்.

இதனிடையே, மத்திய சென்னை தொகுதிக்குட்பட்ட அண்ணாநகர் பகுதியில் உள்ள அன்னை சத்யாநகரில் நேற்றிரவு 10 மணியளவில் தி.மு.க.வினர், ஒவ்வொரு வீடாகச் சென்று கதவைத் தட்டி பண விநியோகம் செய்துள்ளனர். இதுபற்றி தகவல் கிடைத்ததும், அங்கு விரைந்து சென்ற அ.இ.அ.தி.மு.க.வினர், தேர்தல் விதிமுறைகளை மீறி பணப்பட்டுவாடாவில் ஈடுபட்ட தி.மு.க.வினரை விரட்டியடித்தனர்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00