நீலகிரி மலைப்பகுதியில் தொடர் கனமழை - ஈரோடு மாவட்டம் பவானி சாகர் அணையின் நீர் மட்டம் வேகமாக நிரம்பி வருவதால் விவசாயிகள் மகிழ்ச்சி

Sep 2 2014 12:22PM
எழுத்தின் அளவு: அ + அ -

நீலகிரி மலைப்பகுதியில் தொடர்ந்து பெய்து வரும் கனமழையால், ஈரோடு மாவட்டம் பவானி சாகர் அணையின் நீர் மட்டம் வேகமாக நிரம்பி வருவதால், விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

ஈரோடு மாவட்டத்தில் உள்ள பவானி சாகர் அணையில் தேக்கிவைக்கப்படும் தண்ணீர், ஈரோடு மட்டுமின்றி அண்டை மாவட்டங்களிலும் சாகுபடி பணிக்கு பெரிதும் உதவிகரமாக இருந்து வருகிறது. இந்நிலையில், நீலகிரி மாவட்டத்தில் மலைப்பகுதியில் பெய்து வரும் தொடர் மழை காரணமாக, பவானி சாகர் அணைக்கு நீர் வரத்து நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. வினாடிக்கு 7,218 கன அடி அளவிற்கு தண்ணீர் வந்துகொண்டிருப்பதால், அணையின் நீர் மட்டம் கிடுகிடுவென உயர்ந்து, இன்று காலை நிலவரப்படி 74.26 அடியாக உள்ளது. அணையிலிருந்து 2,800 கனஅடி தண்ணீர் வெளியற்றப்படுகிறது. தற்போது, கோபிச்செட்டிப்பாளையம் மட்டுமின்றி, சுற்றுவட்டாரப் பகுதிகளிலும் சாகுபடிப் பணிகள் தீவிரமாக நடைபெற்று வரும் நிலையில், பாசனத்திற்கு தேவையான தண்ணீர் கிடைத்து வருவதால், விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00