ஈமு கோழி வளர்ப்பு திட்டத்தின் சுமார் ஆறரை கோடி ரூபாய் மோசடி செய்ததாக முதலீட்டாளர்கள் புகார் - திண்டுக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த ராஜபாண்டி என்பவர் கைது

Jul 22 2014 3:30PM
எழுத்தின் அளவு: அ + அ -

ஈமு கோழி வளர்ப்பு திட்டத்தின் சுமார் ஆறரை கோடி ரூபாய் மோசடி செய்ததாக முதலீட்டாளர்கள் தெரிவித்த புகாரில், திண்டுக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த ராஜபாண்டி என்பவரை போலீசார் கைது செய்துள்ளனர்.

திண்டுக்கல் சொசைட்டி தெருவில் வசித்து வந்த ராஜபாண்டி என்பவர், ஈமு கோழி வளர்ப்பு நிறுவனத்தை தொடங்கினார். இத்திட்டத்தின் கீழ் ஒரு லட்சம் முதல் 3 லட்சம் ரூபாய் வரை முதலீடு செய்பவர்களுக்கு ஈமு கோழிகளையும், மாதம்தோறும் 8 ஆயிரம் ரூபாய் ஊக்கத்தொகையும் வழங்குவதாக ராஜபாண்டி விளம்பரம் செய்ததை நம்பி, ஏராளமானோர் அவரிடம் பணம் செலுத்தியுள்ளனர். ஆனால், அறிவித்தபடி ராஜபாண்டி கொடுக்காததால் முதலீுட்டாளர்கள் ஏமாற்றமடைந்தனர். இதுகுறித்து நாமக்கல்லைச் சேர்ந்த ஈஸ்வரன் என்பவர் அளித்த புகாரின் அடிப்படையில், மதுரை பொருளாதார குற்ற நடைமுறை பிரிவினர் ராஜபாண்டி மீது வழக்கு பதிவு செய்து அவரை கைது செய்து சிறையில் அடைத்தனர். ராஜபாண்டியிடம் 300க்கும் மேற்பட்டவர்கள் 6 கோடியே 33 லட்சத்து 44 ஆயிரத்து 500 ரூபாய் வரை முதலீடு செய்ததாக புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனிடையே, நாகை மாவட்டத்தில் ரமேஷ் என்ற கூலித்தொழிலாளி முன்விரோதம் காரணமாக கொலைசெய்யப்பட்டார். இதுதொடர்பாக பிரபு என்பவரை போலீசார் கைது செய்து அவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00