கடலூர், அரக்கோணம், விருத்தாச்சலம், ராமநாதபுரம் நகராட்சித் தலைவர் பதவிகளுக்கு போட்டியிட்ட கழக வேட்பாளர்கள் அமோக வெற்றி - பேரூராட்சி, ஊராட்சி உள்ளிட்ட அனைத்து உள்ளாட்சி அமைப்புகளிலும் அ.இ.அ.தி.மு.க. வேட்பாளர்கள் வரலாறு காணாத வெற்றி

Sep 23 2014 10:30AM
எழுத்தின் அளவு: அ + அ -

ராமநாதபுரம், கடலூர், விருத்தாச்சலம், அரக்கோணம் ஆகிய நகராட்சிகளின் தலைவர் பதவிக்கு நடைபெற்ற இடைத்தேர்தலில், முதலமைச்சர் செல்வி. ஜெயலலிதா அறிவித்த அ.இ.அ.தி.மு.க. வேட்பாளர்கள் அனைவரும் அமோக வெற்றி பெற்றுள்ளனர். மாநகராட்சி, நகராட்சி வார்டு உறுப்பினர், பேரூராட்சி தலைவர், ஊராட்சித் தலைவர் மற்றும் வார்டு உறுப்பினர் உள்ளிட்ட பதவிகளுக்கு நடைபெற்ற இடைத் தேர்தல்களிலும் அ.இ.அ.தி.மு.க. வேட்பாளர்களே வெற்றி பெற்றுள்ளனர்.

ராமநாதபுரம் நகராட்சித் தலைவர் தேர்தலில், முதலமைச்சர் செல்வி ஜெ ஜெயலலிதா அறிவித்த அ.இ.அ.தி.மு.க. வேட்பாளர் திருமதி S. சந்தானலட்சுமி, 13,067 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றுள்ளார். இவருக்கு 20,442 வாக்குகளும், எதிர்த்துப் போட்டியிட்ட பா.ஜ.க. வேட்பாளருக்கு 7,487 வாக்குகளும் கிடைத்தன.

கடலூர் நகராட்சித் தலைவர் தேர்தலில், அ.இ.அ.தி.மு.க. வேட்பாளர் திரு. ஆர். குமரன், 57,258 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றார். இவருக்கு 63,550 வாக்குகளும், இவரை எதிர்த்துப் போட்டியிட்ட மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளருக்கு 6,292 வாக்குகளும் கிடைத்தன.

விருத்தாசலம் நகராட்சித் தலைவர் தேர்தலில், கழக வேட்பாளர் திரு.P.அருளழகன், 25,497 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார். இவருக்கு 29,148 வாக்குகளும், எதிர்த்துப் போட்டியிட்ட பா.ஜ.க. வேட்பாளருக்கு 3,651 வாக்குகளும் கிடைத்தன.

வேலூர் மாவட்டம் அரக்கோணம் நகராட்சித் தலைவர் தேர்தலில், கழக வேட்பாளர் திரு.எஸ்.கண்ணதாசன், 18,196 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றுள்ளார். இவருக்கு 22,301 வாக்குகளும், இவரை எதிர்த்துப் போட்டியிட்ட சுயேச்சை வேட்பாளருக்கு 3,205 வாக்குகளும் கிடைத்தன.

சென்னை மாநகராட்சி 35-வது வார்டு கவுன்சிலர் தேர்தலில் அ.இ.அ.தி.மு.க. வேட்பாளர் திரு. டேவிட் ஞானசேகரன், 19,676 வாக்குகள் பெற்று, வெற்றி பெற்றார்.

ஈரோடு மாநகராட்சியின் 60-வது வார்டு உறுப்பினர் தேர்தலில் கழக வேட்பாளர் திரு. T. பாலசுப்ரமணியம் 2,771 வாக்குகள் பெற்று, வெற்றி பெற்றார்.

மதுரை மாநகராட்சியின் 4-வது வார்டு உறுப்பினர் தேர்தலில் அ.இ.அ.தி.மு.க. வேட்பாளர் திரு. கே. சண்முகம், 4,977 வாக்குகள் பெற்றும், தூத்துக்குடி மாநகராட்சியின் 37-வது வார்டு உறுப்பினர் தேர்தலில் கழக வேட்பாளர் திரு. A. மாரிமுத்து 2,604 வாக்குகள் பெற்றும் வெற்றி பெற்றனர்.

திருச்சிராப்பள்ளி மாநகராட்சியின் 15-வது வார்டில் போட்டியிட்ட கழக வேட்பாளர் திருமதி. எம். ராஜலட்சுமி 6,807 வாக்குகள் பெற்றும், 32-வது வார்டில் போட்டியிட்ட கழக வேட்பாளர் திரு. எஸ். சங்கர் 1,640 வாக்குகள் பெற்றும் வெற்றி பெற்றனர்.

திருப்பூர் மாநகராட்சியின் 45-வது வார்டில் போட்டியிட்ட கழக வேட்பாளர் திரு. எம். கண்ணப்பன், 4,293 வாக்குகள் பெற்றும், 22-வது வார்டில் கழக வேட்பாளர் திரு. எம். கோபால்சாமி 3,882 வாக்குகள் பெற்றும் வெற்றி பெற்றனர்.

கோவை மாவட்டத்தில், சூளூர் பேரூராட்சி தலைவர் பதவிக்கு போட்டியிட்ட அ.இ.அ.தி.மு.க. வேட்பாளர் திரு. எஸ். தங்கராஜ், இருகூர் பேரூராட்சி தலைவர் பதவிக்கு போட்டியிட்ட கழக வேட்பாளர் திருமதி. P. பத்மசுந்தரி ஆகியோர் அமோக வெற்றி பெற்றனர்.

சேலம் மாவட்டத்தில், ஓமலூர் பேரூராட்சி தலைவர் தேர்தலில் கழக வேட்பாளர் திரு. எம். சிவகுமார், திருப்பூர் மாவட்டத்தில் திருமுருகன்பூண்டி பேரூராட்சி தலைவர் தேர்தலில் அ.இ.அ.தி.மு.க. வேட்பாளர் திரு. A. பழனிச்சாமி, மடத்துக்குளம் பேரூராட்சி தலைவர் தேர்தலில் கழக வேட்பாளர் திரு. எஸ். பழனிச்சாமி, திருநெல்வேலி மாவட்டத்தில் சுந்தரபாண்டிபுரம் பேரூராட்சி தலைவர் தேர்தலில் கழக வேட்பாளர் திரு. V. பண்டாரம் ஆகியோரும் அமோக வெற்றி பெற்றனர்.

அரியலூர் நகராட்சி 13-வது வார்டு, பல்லடம் நகராட்சி 6-வது வார்டு, குழித்துறை நகராட்சி 20-வது வார்டு, பவானி நகராட்சி 7-வது வார்டு, ராமநாதபுரம் நகராட்சி 19-வது வார்டு, பரமக்குடி நகராட்சி 20-வது வார்டு, கீழக்கரை நகராட்சி 15-வது வார்டு, நாகர்கோவில் நகராட்சி 37-வது வார்டு, பத்மநாபபுரம் நகராட்சி 11-வது வார்டுகளில் அ.இ.அ.தி.மு.க. வேட்பாளர்கள் அமோக வெற்றி பெற்றனர்.

சிதம்பரம் நகராட்சியில் 17 மற்றும் 20-வது வார்டுகளிலும், விருத்தாசலம் நகராட்சியில் 26-வது வார்டிலும் கழக வேட்பாளர்கள் அமோக வெற்றி பெற்றனர். வேலூர் மாவட்டம் வாணியம்பாடி நகராட்சியில் 35-வது வார்டிலும், விருதுநகர் நகராட்சியில் 10, 21 மற்றும் 34-வது வார்டுகளில் அ.இ.அ.தி.மு.க. வேட்பாளர்கள் வெற்றி பெற்றனர்.

திருநெல்வேலி மாவட்டத்தில், தென்காசி நகராட்சி 14-வது வார்டிலும், கடையநல்லூர் நகராட்சி 19-வது வார்டிலும், விக்கிரமசிங்கபுரம் நகராட்சி 20-வது வார்டிலும் கழக வேட்பாளர்கள் வெற்றி பெற்றனர்.

நாமக்கல், மாவட்டபஞ்சாயத்து வார்டு உறுப்பினர் தேர்தலில், கழக வேட்பாளர் திருமதி. வைரம் தமிழரசி வெற்றிபெற்றார். சேந்தமங்கலம் மற்றும் படைவீடு பேரூராட்சி வார்டு உறுப்பினர் தேர்தலிலும் அ.இ.அ.தி.மு.க. அமோக வெற்றிபெற்றுள்ளது.

பேரூராட்சி வார்டு உறுப்பினர், ஊராட்சித் தலைவர் மற்றும் உறுப்பினர் பதவிகளுக்கு நடைபெற்ற தேர்தல்களிலும் அ.இ.அ.தி.மு.க. வேட்பாளர்களே அமோக வெற்றி பெற்றுள்ளனர். முதலமைச்சர் செல்வி ஜெயலலிதா அரசின் மக்கள் நலத் திட்டங்களால் மிகவும் பயனடைந்த பொதுமக்கள், அ.இ.அ.தி.மு.க. வேட்பாளர்களுக்கு மீண்டும் மகத்தான வெற்றியை அளித்துள்ளனர்.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00