நாகை மாவட்டத்தில் வறட்சி மற்றும் உப்புத்தன்மையை தாங்கி வளரக்கூடிய புதிய ரக நெல் அறிமுகம்

Aug 27 2014 11:31AM
எழுத்தின் அளவு: அ + அ -

நாகை மாவட்டத்தில் நடைபெற்ற விவசாயிகளுக்கான செயல்விளக்க பயிற்சிக் கூட்டத்தில், வறட்சி மற்றும் உப்புத்தன்மையை தாங்கி வளரக்கூடிய புதிய ரக நெல் அறிமுகப்படுத்தப்பட்டது.

நாகை மாவட்டம் கத்திரிப்புலத்தில் விவசாயிகளுக்கு சம்பா நெல்சாகுபடி குறித்த முன்பருவ செயல்விளக்க பயிற்சி நடைபெற்றது. இதில், வேளாண் அறிவியல் மையப் பேராசிரியர்கள், வேளாண்துறை அலுவலர்கள் கலந்துகொண்டனர். மண்வளம், நீர்மேலாண்மை, வறட்சி எதிர்கொள்வது உள்ளிட்டவை குறித்து விவசாயிகளுக்கு விளக்கம் அளிக்கப்பட்டது. மானாவரி பகுதிகளான கத்திரிப்புலம், குரவப்புலம், புஷ்பவனம், தாணிக்கோட்டகம், வாய்மேடு, ஆதனூர் ஆகிய இடங்களுக்கு வறட்சியை தாங்கி வளர்க்கூடிய புதிய ரக நெல் விதைகள் வழங்கப்பட்டன. மேலும், உலர், களர் நிலங்கள் நிறைந்த அவரிக்காடு, நாலுவேதபதி போன்ற பகுதிகளில் உப்புத் தன்மைக்கேற்ப திருச்சி-3 என்ற ரக நெல் விதைகளும் வழங்கப்பட்டன. இந்நிகழ்ச்சியில் 200-க்கும் மேற்பட்ட விவசாயிகள் கலந்துகொண்டு, பயன்பெற்றனர்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00