மக்களின் முதல்வர் அம்மாவுக்கு தங்களின் பேராதரவைத் தெரிவித்து திருச்சி, மதுரை, கரூர், விழுப்புரம், கடலூர் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில், வணிகர்கள் கடைகளை அடைத்து அறப்போராட்டம்

Oct 1 2014 4:40PM
எழுத்தின் அளவு: அ + அ -

பெங்களூரு நீதிமன்றத் தீர்ப்பைக் கண்டித்தும், மக்களின் முதல்வர் செல்வி ஜெயலலிதாவுக்கு தங்களின் பேராதரவைத் தெரிவிக்கும் வகையிலும், திருச்சி, மதுரை, கரூர், விழுப்புரம், கடலூர் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில், வணிகர்கள் நேற்று, தாங்களாகவே முன்வந்து கடைகளை அடைத்து, அறப்போராட்டத்தில் ஈடுபட்டனர்.

என்றென்றும் தமிழக மக்களின் முதல்வராகத் திகழும் செல்வி ஜெயலலிதாவுக்கு தங்களின் பேராதரவை தெரிவிக்கும் வகையில், வணிகர்கள், பல்வேறு மாவட்டங்களில் நேற்று தாங்களாகவே முன்வந்து கடைகள் மற்றும் வர்த்தக நிறுவனங்களை அடைத்து அறப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

திருச்சி மாவட்டத்தில் வியாபாரிகள் கூட்டமைப்பு சார்பில், வணிகர்கள் கடைகளை அடைத்து மக்களின் முதல்வர் செல்வி. ஜெயலலிதாவுக்கு தங்கள் பேராதரவை வெளிப்படுத்தினர். திருச்சியில் முக்கிய வர்த்தக மையமான காந்தி மார்க்கெட் உள்ளிட்ட இடங்களில் கடைகள் மற்றும் வர்த்தக நிறுவனங்கள் மூடப்பட்டிருந்தன.

மதுரை மாவட்டத்தில் 34 வணிகர் சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் நடைபெற்ற அறப்போராட்டம் காரணமாக மதுரை, மேலூர், திருமங்கலம், திருப்பரங்குன்றம் உட்பட பல்வேறு இடங்களில் கடைகள் உள்ளிட்ட வர்த்தக நிறுவனங்கள் அடைக்கப்பட்டிருந்தன.

கரூர் மாவட்டத்தில் ஜவுளி உரிமையாளர்கள் சங்கம், லாரி உரிமையாளர்கள் சங்கம், மாவட்ட நெல் அரிசி உரிமையாளர்கள் சங்கம், கைத்தறி உரிமையாளர்கள் சங்கம் உட்பட 35 சங்கங்கள், மக்களின் முதல்வர் செல்வி ஜெயலலிவுக்கு இழைக்கப்பட்ட அநீதியைக் கண்டித்து மாவட்டம் முழுவதும் கடையடைப்பு போராட்டத்தில் ஈடுபட்டன.

திண்டுக்கல் மாவட்ட வர்த்தகர்கள் மற்றும் வணிகர் சங்கங்கள் சார்பில், கடையடைப்புப் போராட்டம் நடத்தப்பட்டது. சுமைதூக்கும் தொழிலாளர்கள், காய்கறி விற்பனையாளர்கள் உள்ளிட்டோரும் அறப்போராட்டத்தில் கலந்துகொண்டு, மக்களின் முதல்வர் செல்வி. ஜெயலலிதாவுக்கு ஆதரவு தெரிவித்தனர்.

நாமக்கல் மாவட்டத்தில் ராசிபுரம், நாமக்கல், திருச்செங்கோடு, குமாரபாளையம் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் வர்த்தகர்கள் தாங்களாகவே முன்வந்து, கடைகளை அடைத்து அறப்போராட்டத்தில் ஈடுபட்டனர்.

விழுப்புரம் மாவட்டத்திலும் வணிகர்கள் தாங்களாகவே முன்வந்து கடைகளை அடைத்து, மக்களின் முதல்வர் செல்வி ஜெயலலிதாவுக்கு தங்களின் பேராதவை தெரிவித்தனர்.

புதுக்கோட்டையில் வணிகர்கள், கடைகள் மற்றும் வர்த்தக நிறுவனங்களை தாங்களாகவே முன்வந்து அடைத்து, அறப்போராட்டத்தில் ஈடுபட்டனர்.

மக்களின் முதல்வர் செல்வி ஜெயலலிதாவுக்கு தங்கள் பேராதரவை தெரிவிக்கும் வகையில், திருவாரூர் மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் வர்த்தக நிறுவனங்களை அடைத்து, வணிகர்கள் அறப்போராட்டத்தில் ஈடுபட்டனர்.

கடலூர் மாவட்டத்திலும் திட்டக்குடி, பெண்ணாடம் உள்ளிட்ட இடங்களில் இன்று கடைகள் அடைக்கப்பட்டிருந்தன. மக்களின் முதல்வருக்கு அநீதி இழைக்கப்பட்டிருப்பதற்கு வணிகர்கள் கண்டனம் தெரிவித்தனர்.

ஈரோட்டில் மஞ்சள் கிடங்குகள் மூடப்பட்டிருந்தன. ஜவுளி சந்தையில், ஆயிரத்திற்கும் மேற்பட்ட கடைகளை வியாபாரிகள் அடைத்து, மக்களின் முதல்வர் செல்வி. ஜெயலலிதாவுக்கு தங்கள் பேராதரவைத் தெரிவித்தனர்.

தர்மபுரி மாவட்டம் கடத்தூரிலும், வியாபாரிகள் தாங்களாவே முன்வந்து கடைகளை அடைத்து, மக்களின் முதல்வர் செல்வி ஜெயலலிதாவுக்கு தங்களின் பேராதரவைத் தெரிவித்தனர்.

இதனிடையே, தேனி மாவட்டத்தில் வரும் 3-ம் தேதி தாங்களாகவே முன்வந்து கடைகளை அடைத்து அறப்போராட்டத்தில் ஈடுபடப் போவதாக, தேனி மாவட்ட வர்த்தக சங்கம் அறிவித்துள்ளது.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00