மக்களின் முதல்வருக்கு எதிரான அநீதியைக் கண்டித்து, தமிழகம் முழுவதும் அ.இ.அ.தி.மு.க. தொண்டர்கள் மற்றும் பொதுமக்கள் தொடர்ந்து உண்ணாவிரதம் : கருப்பு சட்டை மற்றும் கருப்பு பேட்ஜ் அணிந்து, அறவழிப் போராட்டம்

Oct 1 2014 4:04PM
எழுத்தின் அளவு: அ + அ -

மக்களின் முதல்வர் செல்வி. ஜெயலலிதாவுக்கு எதிராக பெங்களூரு நீதிமன்றம் இழைத்த அநீதியைக் கண்டித்தும், அவருக்கு பேராதரவு தெரிவிக்கும் வகையிலும், தமிழகம் முழுவதும் அ.இ.அ.தி.மு.க. தொண்டர்கள் மற்றும் பொதுமக்கள் நேற்றும் உண்ணாவிரதப் போராட்டம் நடத்தினர். கருப்பு சட்டை மற்றும் கருப்பு பேட்ஜ் அணிந்தபடி பல லட்சக்கணக்கானோர் இந்த அறவழிப் போராட்டத்தில் பங்கேற்றனர். பெண்கள் பல்லாயிரக்கணக்கானோர் கலந்துகொண்டு மக்களின் முதல்வருக்கு தங்கள் உறுதியான ஆதரவை தெரிவித்தனர்.

மக்களின் முதல்வர் செல்வி ஜெ ஜெயலலிதாவுக்கு இழைக்கப்பட்ட அநீதியைக் கண்டித்து சென்னை ஆலந்தூர் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட ஆசர்கானா பகுதியில், எம்.ஜி.ஆர். சிலை அருகில் அ.இ.அ.தி.மு.க.வினரும், பொதுமக்களும் அறவழியில் உண்ணாவிரதப் போராட்டம் நடத்தினர். ஆண்கள் கருப்பு சட்டையும், பெண்கள் கருப்பு புடவையையும் அணிந்து போராட்டத்தில் பங்கேற்றனர்.

சென்னை ஆயிரம் விளக்கு பகுதியில் ஆயிரக்கணக்கான அ.இ.அ.தி.மு.க.வினர் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தண்டையார் பேட்டையில் ஆயிரக்கணக்கான அ.இ.அ.தி.மு.க.வினரும், பொதுமக்களும் உண்ணாவிரதப்போராட்டம் மேற்கொண்டனர்.

சென்னை ராயபுரம் ஜி.ஏ. சாலையில்நடைபெற்ற உண்ணாவிரதப் போராட்டத்தில், அ.இ.அ.தி.மு.க.வினர் பெருமளவில் கலந்துகொண்டனர்.

சென்னை ஆர்.கே.நகரில் அ.இ.அ.தி.மு.க. அவைத்தலைவர் திரு. இ. மதுசூதனன் தலைமையில், கழகத் தொண்டர்கள் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

வடசென்னை பட்டாளம் மற்றும் பெரம்பூர் ஃபேரக்ஸ் சாலை பகுதியில் ஆயிரக்கணக்கான அ.இ.அ.இ.அ.தி.மு.க. வினர் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

கோயம்பேட்டில் நடைபெற்ற உண்ணாவிரதப் போராட்டத்தில் பெருந்திரளான அ.இ.அ.தி.மு.க. தொண்டர்கள் பங்கேற்றனர்.

காஞ்சிபுரம் மாவட்டம் தாம்பரம், சோழிங்கநல்லூர், நாவலூர், திருப்போரூர் உள்ளிட்ட பகுதிகளில் ஆயிரக்கணக்கான அ.இ.அ.தி.மு.க.வினர் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

காஞ்சிபுரம் மத்திய மாவட்டக் கழகம் சார்பில் செங்கல்பட்டு பேருந்து நிலையம் அருகில், ஏராளமான அ.இ.அ.தி.மு.க.வினர் கருப்பு பேட்ஜ் அணிந்து உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

திருவள்ளூர் பேருந்துநிலையம் அருகே அ.இ.அ.தி.மு.க. சார்பில் நடைபெற்ற உண்ணாவிரதப் போராட்டத்தில் ஆயிரக்கணக்கான கழகத் தொண்டர்கள் கருப்பு சட்டை அணிந்து பங்கேற்றனர்.

திருச்சி மாநகர் மாவட்ட அ.இ.அ.தி.மு.க. சார்பில், சத்திரம் பேருந்து நிலையப் பகுதியில் நடைபெற்ற உண்ணாவிரதப் போராட்டத்தில், பல்லாயிரக்கணக்கான கழகத் தொண்டர்களும், பொதுமக்களும் பங்கேற்றனர்.

திருச்சி புறநகர் மாவட்டக் கழகம் சார்பில், மணப்பாறை, மண்ணச்சநல்லூர், திருவெறும்பூர், துறையூர், முசிறி, லால்குடி உள்ளிட்ட 15 இடங்களில் உண்ணாவிரதப் போராட்டம் நடைபெற்றது. ஸ்ரீரங்கம் தொகுதி மக்கள் உட்பட ஆயிரக்கணக்கான பொதுமக்களும், அ.இ.அ.தி.மு.க. தொண்டர்களும் கலந்து கொண்டனர்.

திருச்சி மாவட்டம் புள்ளம்பாடி பகுதியில் நடைபெற்ற உண்ணாவிரதப் போராட்டத்தில், ஏராளமானோர் மொட்டை அடித்துக்கொண்டு பங்கேற்றனர்.

பெரம்பலூர் மாவட்ட அ.இ.அ.தி.மு.க. சார்பில் நடைபெற்ற அமைதிப் பேரணியில், ஏராளமான கழகத் தொண்டர்களும் பொதுமக்களும் பங்கேற்றனர்.

அரியலூர் மாவட்டம் ஆண்டிமடம் உள்ளிட்ட இடங்களில் நடைபெற்ற உண்ணாவிரதப் போராட்டத்தில் பெருந்திரளானோர் கலந்துகொண்டனர்.

நாமக்கல் மாவட்டம் நாமகிரிப்பேட்டை, நாமக்கல், மல்லசமுத்திரம், ராசிபுரம், கொல்லிமலை, எலச்சிப்பாளையம், குமாரபாளையம் உள்ளிட்ட பல்வேறு இடங்களில், அ.இ.அ.தி.மு.க. தொண்டர்களும் பொதுமக்களும் உண்ணாவிரதப் போராட்டம் நடத்தினர். நாமகிரிப்பேட்டையில் நூற்றுக்கணக்கானோர் மொட்டை அடித்துக்கொண்டு இந்த அறப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

வேலூர் மாவட்டம் வாலாஜா பகுதியில், கல்லூரி மாணவிகள் வகுப்புகளுக்குச் செல்லாமல், கடும் வெயிலையும் பொருட்படுத்தாமல், மக்களின் முதல்வர் செல்வி. ஜெயலலிதா, கல்வி மேம்பாட்டுக்காக செயல்படுத்திவரும் திட்டங்கனை நினைவுகூர்ந்து அறவழியில் போராட்டம் நடத்தினர்.

வாணியம்பாடி, காட்பாடி, காவேரிப்பாக்கம், வாலாஜாபேட்டை, பள்ளிகொண்டா உள்ளிட்ட வேலூர் மாவட்டத்தின் பல்வேறு இடங்களிலும் அ.இ.அ.தி.மு.க. சார்பில் நடைபெற்ற உண்ணாவிரதப் போராட்டத்தில், பல்லாயிரக்கணக்கான கழகத் தொண்டர்கள் பங்கேற்றனர்.

தஞ்சாவூர் வடக்கு மாவட்ட அ.இ.அ.தி.மு.க. சார்பில் மக்களின் முதல்வர் செல்வி ஜெயலலிதாவுக்கு ஆதரவு தெரிவித்து, தாராசுரம், காந்திபார்க், பாபநாசம், திருப்பனந்தாள், திருபுவனம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் கழகத் தொண்டர்களும், கல்லூரி மாணவ-மாணவிகளும் பங்கேற்ற உண்ணாவிரதப் போராட்டம் நடைபெற்றது.

தஞ்சாவூர் மாவட்டம் ஒரத்தநாடு, பூதலூர், பட்டுக்கோட்டை, திருவையாறு மற்றும் அம்மாபேட்டை பகுதிகளிலும் உண்ணாவிரதப் போராட்டம் நடைபெற்றது.

திருவாரூர் மாவட்டத்தில், குடவாசல், நன்னிலம், கொறடாச்சேரி, கூத்தாநல்லூர், கோட்டூர், நீடாமங்கலம், வலங்கைமான் உள்ளிட்ட இடங்களில் நடைபெற்ற உண்ணாவிரதப் போராட்டத்தில் ஆயிரக்கணக்கான கழகத் தொண்டர்கள் மற்றும் பொதுமக்கள் கருப்பு பேட்ஜ் அணிந்து கலந்துகொண்டனர்.

திருவாரூர் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் கல்லூரி மாணவ-மாணவிகள் வகுப்புகளுக்குச் செல்லாமல் மக்களின் முதல்வர் செல்வி. ஜெயலலிதாவுக்கு ஆதரவாக அறவழிப் போராட்டம் நடத்தினர்.

திருவாரூர் மாவட்ட ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் 2-வது நாளாக வழக்கறிஞர்கள் நீதிமன்றத்தை புறக்கணித்து, அறவழிப் போராட்டம் மேற்கொண்டனர்.

மக்களின் முதல்வர் செல்வி ஜெயலலிதாவுக்கு எதிரான தீர்ப்பைக் கண்டித்து, கோயம்புத்தூர் மாவட்டம், மதுக்கரை, தொண்டாமுத்தூர், பொள்ளாச்சி உள்ளிட்ட பகுதிகளில் அ.இ.அ.தி.மு.க. சார்பில் உண்ணாவிரதப் போராட்டம் நடைபெற்றது. கவுண்டம்பாளையம் தொகுதிக்கு உட்பட்ட துடியலூர் பகுதியில், மாற்றுத்திறனாளிகள் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

பொள்ளாச்சியை அடுத்த கேரள மாநிலம் சித்தூரில், பொதுமக்கள் சுப்பிரமணியன் சுவாமியின் உருவபொம்மையை எரித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

திருப்பூர் குமரன் சிலை அருகே 5 ஆயிரம் அ.இ.அ.தி.மு.க. தொண்டர்கள் கருப்பு சட்டை அணிந்து 2வது நாளாக உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதேபோல், மங்களம் நால்ரோடு சந்திப்பு, ஊத்துக்குளி, உடுமலை, அவினாசி, கரட்டு மடம், பெருமாநல்லூர் உள்ளிட்ட பகுதிகளிலும் அ.இ.அ.தி.மு.க.வினர் உண்ணாவிரதப் போராட்டம் நடத்தினர்.

நாகை மாவட்டத்தில், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, வேதாரண்யம், சீர்காழி, செம்பனார் கோவில், கீழ்வேளூர் உள்ளிட்ட பகுதிகளில் அ.இ.அ.தி.மு.க.வினர் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதில், பெண்கள் அதிக அளவில் பங்கேற்றனர்.

செம்பனார்கோவிலில், கருணாநிதி மற்றும் சுப்பிரமணியன் சுவாமியின் உருவ பொம்மைகள் எரிக்கப்பட்டன.

குத்தாலம் பேரூராட்சி அ.இ.அ.தி.மு.க சார்பில், கழகத் தொண்டர்கள் மொட்டையடித்து, மக்களின் முதல்வர் செல்வி. ஜெயலலிதாவுக்கு இழைக்கப்பட்ட அநீதிக்கு கண்டனம் தெரிவித்தனர்.

நாகை மாவட்டம் மயிலாடுதுறையில், நூற்றுக்கணக்கான கேபிள் டி.வி. ஆபரேட்டர்கள் மவுன ஊர்வலம் நடத்தி, மக்களின் முதல்வருக்கு தங்கள் பேராதரவைத் தெரிவித்தனர்.

கடலூர் மாவட்டம் குறிஞ்சிப்பாடி ஒன்றியத்திற்குட்பட்ட வடலூர் நகர்ப்பகுதியில், மூவாயிரத்துக்கும் மேற்பட்ட அ.இ.அ.தி.மு.க.வினர் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

சேலம் மாவட்டம் ஆட்டையாம்பட்டி பகுதியில், மூவாயிரத்துக்கும் மேற்பட்ட அ.இஅ.தி.மு.க. தொண்டர்கள் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும் 50க்கும் மேற்பட்டோர் மொட்டையடித்து பிரார்த்தனையில் ஈடுபட்டனர்.

ஆத்தூரை அடுத்த பெத்தநாயக்கன்பாளையம் பகுதியில் நடைபெற்ற உண்ணாவிரதப் போராட்டத்தில் அ.இ.அ.தி.மு.க. தொண்டர்களும், பொதுமக்களும் பெருமளவில் பங்கேற்றனர்.

அயோத்தியாபட்டணம், நரசிங்கபுரம், புத்திரகவுண்டம்பாளையம், தலைவாசல் உள்ளிட்ட இடங்களில் அ.இ.அ.தி.மு.க. தொண்டர்கள் மவுன ஊர்வலம் நடத்தியதோடு, உண்ணாவிரதப் போராட்டத்திலும் ஈடுபட்டனர். ஏராளமானோர் மொட்டை அடித்துக்கொண்டு, உண்ணாவிரதத்தில் பங்கேற்றனர்.

ஏற்காட்டில், கொட்டும் மழையில், ஏராளமான கழகத் தொண்டர்களும் பொதுமக்களும், மக்களின் முதல்வர் செல்வி. ஜெயலலிதாவுக்கு ஆதரவாக உண்ணாவிரதப் போராட்டம் நடத்தினர்.

நெல்லை மாவட்டத்தில் பாளையங்கோட்டை, அம்பாசமுத்திரம், களக்காடு, ராதாபுரம் சங்கரன்கோவில், வாசுதேவநல்லூர், கடையநல்லூர், தென்காசி, ஆலங்குளம் உள்ளிட்ட பல இடங்களில் அ.இ.அ.தி.மு.க.வினரும், பொதுமக்களும் தொடர்ந்து அறவழியில் போராட்டம் நடத்தி வருகின்றனர். நெல்லை மாநகர் மாவட்டக் கழகம் சார்பில் பாளையங்கோட்டை மார்க்கெட் அருகில் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்தப் போராட்டத்தில் கவின் என்ற 4 வயது சிறுவன் கருப்பு சட்டை அணிந்து கலந்து கொண்டான்.

திருநெல்வேலி மாவட்டம் அம்பாசமுத்திரம் பகுதியிலும், உண்ணாவிரதப் போராட்டம் நடைபெற்றது.

திண்டுக்கல் ரயில் நிலையம் அருகேயுள்ள நாகல்நகரில் அ.இ.அ.தி.மு.க. சார்பில் அறவழியில் மாபெரும் உண்ணாவிரதப் போராட்டம் நடைபெற்றது. இதில், கழகத் தொண்டர்கள் ஏராளமானோர் பங்கேற்றனர். பெண்களும் பெருமளவில் கலந்து கொண்டு கண்ணீர்மல்க தங்கள் சோகத்தை வெளிப்படுத்தினர்.

கொடைக்கானல் மலைப்பகுதியில் மணலூர் உள்ளிட்ட பல்வேறு கிராமங்களைச் சேர்ந்த 200 பெண்கள் உட்பட 500க்கும் மேற்பட்ட விவசாயிகள் சுமார் 30 கிலோமீட்டர் தூரம் பாதயாத்திரையாக மலையடிவாரத்தில் உள்ள சித்தூர் கிராமத்திற்கு சென்று, மக்களின் முதல்வர் செல்வி. ஜெயலலிதாவுக்கு தங்கள் பேராதரவைத் தெரிவித்தனர்.

கொடைக்கானலில், தனியார் பள்ளி மாணவ-மாணவிகள் பெருந்திரளாகக் கூடி நின்று, மக்களின் முதல்வர் செல்வி. ஜெயலலிதாவுக்கு பேராதரவைத் தெரிவித்தனர். இதனையொட்டி, அந்தப் பள்ளிக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டது.

நீலகிரி மாவட்டம், உதகை, கூடலூர், குன்னூர், கோத்தகிரி, குந்தா ஆகிய பகுதிகளில் அ.இ.அ.தி.மு.க. சார்பில், உண்ணாவிரதப் போராட்டம் நடைபெற்றது. இந்தப் போராட்டத்தில் தோட்டத் தொழிலாளர்கள், தேயிலை விவசாயிகள், வாகன ஓட்டுனர்கள் என 20 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கருப்பு சட்டை அணிந்து பங்கேற்றனர்.

புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதி, புதுக்கோட்டை, விராலிமனை, இலுப்பூர், அறந்தாங்கி உள்ளிட்ட பகுதிகளில் அ.இ.அ.தி.மு.க.வினரும், பொதுமக்களும் வாயில் கருப்புத்துணி கட்டிய நிலையில் உண்ணாவிரதத்தில் ஈடுபட்டுள்ளனர்.

ராமநாதபுரம் மாவட்ட அ.இ.அ.தி.மு.க. சார்பில் ராமநாதபுரம் அரண்மனை முன்பு உண்ணாவிரதம் நடைபெற்றது.

தூத்துக்குடியில் மாவட்டக் கழக வழக்கறிஞர் பிரிவு சார்பில், நீதிமன்ற வளாகம் முன்பு வழக்கறிஞர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். தொடர்ந்து அப்பகுதியில் உண்ணாவிரதம் மேற்கொண்டனர்.

தூத்துக்குடி மாவட்டத்தில் விளாத்திகுளம், புதூர், கயத்தாறு ஆகிய பகுதிகளில் அ.இ.அ.தி.மு.க.வினரும், பொதுமக்களும் இணைந்து உண்ணாவிரதம் இருந்து வருகின்றனர்.

தூத்துக்குடி குரூஸ் பர்ணாந்து சிலை முன்பு திரண்ட அ.இ.அ.தி.மு.க.வினர் கருணாநிதி மற்றும் சுப்பிரமணியன் சுவாமி உருவபொம்மைகளை எரித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

ஈரோடு மாவட்டம் சூரம்பட்டி நான்கு சாலை, கொடுமுடி பேருந்துநிலையம், மொடக்குறிச்சி ஆகிய பகுதிகளில், ஆயிரக்கணக்கான அ.இ.அ.தி.மு.க.வினர் கருப்பு சட்டை மற்றும் பேட்ஜ் அணிந்து உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

விருதுநகர் மாவட்ட அ.இ.அ.தி.மு.க. சார்பில் விருதுநகர் அம்மன் கோயில் திடலில், கொட்டும் மழையையும் பொருட்படுத்தாமல் உண்ணாவிரதப் போராட்டம் நடைபெற்றது.

மக்களின் முதல்வர் செல்வி ஜெயலலிதாவை சிறையில் அடைத்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து கர்நாடக மாநிலம் கோலார் தங்க வயல் பகுதியில் அண்ணா தொழிற்சங்கப் பேரவை சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில், ஏராளமான அ.இ.அ.தி.மு.க.வினரும், பல்வேறு அமைப்பினரும் கலந்து கொண்டனர்.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00