சென்னை, திருவள்ளூர், நாகை உள்ளிட்ட மாவட்டங்களைச் சேர்ந்த லட்சக்கணக்கான மீனவர்கள், மக்களின் முதல்வர் ஜெயலலிதாவுக்கு ஆதரவு தெரிவித்து தொடர் வேலை நிறுத்தப் போராட்டம்

Oct 1 2014 4:09PM
எழுத்தின் அளவு: அ + அ -

மக்களின் முதல்வர் செல்வி ஜெயலலிதாவை, அரசியலில் நேரடியாக எதிர்கொள்ள முடியாமல், குறுக்கு வழியைத் தேர்ந்தெடுத்த கருணாநிதி, சுப்பிரமணியன் சுவாமி ஆகியோரைக் கண்டித்து, சென்னை, திருவள்ளூர், நாகை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த மீனவர்கள் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டனர். மக்களின் முதல்வர் செல்வி ஜெயலலிதாவுக்கு நீதிகிடைக்கும் வரை காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடப் போவதாக ராமேஸ்வரம் மற்றும் மண்டபம் மீனவர்கள் அறிவித்துள்ளனர்.

மக்களின் முதல்வர் செல்வி ஜெ ஜெயலலிதா மீனவ சமுதாய நலனுக்காக செயல்படுத்தியுள்ள பல்வேறு நலத்திட்டங்களால் மிகவும் பயனடைந்துள்ள மீனவப் பெருமக்கள், பெங்களூரு சிறப்பு நீதிமன்றத் தீர்ப்பினையடுத்து, பெரும் சோகத்திற்கு ஆளாகியுள்ளனர். தங்களுக்காக குரல் கொடுக்கும் மக்களின் முதல்வருக்கு, தங்களது பேராதரவை தெரிவிக்கும் வகையில் பல்வேறு அறவழிப்போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.

சென்னை எலியட்ஸ் கடற்கரை பகுதியில், ஓடைமாநகர், ஓடைகுப்பம், புது ஓடை குப்பம் உள்ளிட்ட இடங்களில், பெங்களூரு நீதிமன்றத் தீர்ப்பைக் கண்டித்து, தொடர் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ள மீனவர்கள், உண்ணாவிரதப் போராட்டம் நடத்தினர்.

சென்னை காசிமேடு ஐக்கிய மீனவர் சங்கத்தின் சார்பில் 30 கிராமங்களைச் சேர்ந்த மீனவர்கள் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டனர். ஆயிரம் விசைப்படகுகள், மூவாயிரம் ஃபைபர் படகுகள் உட்பட 5 ஆயிரம் படகுகளுடன் மீனவர்கள் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

சென்னை நீலாங்கரை மற்றும் மாமல்லபுரத்தையடுத்த கரிக்காட்டு குப்பம் பகுதி மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்கச் செல்லாமல் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

திருவள்ளூர் மாவட்டம் பழவேற்காடு லைட் ஹவுஸ்குப்பம், அரங்கன்குப்பம், திருமால் குப்பம், சின்னமாங்கோடு, பெரியமாங்கோடு உள்ளிட்ட 52 மீனவ கிராமங்களைச் சேர்ந்த மீனவர்கள் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால், 5 ஆயிரம் விசைப்படகுகள் கரையில் நிறுத்திவைக்கப்பட்டிருந்தன. மீனவப் பெண்கள் கடல்நீரில் இறங்கி, கதறி அழுது போராட்டம் நடத்தினர். மேலும், திருவொற்றியூரை அடுத்த நல்லதண்ணீர் ஓடை குப்பம், எண்ணூர் உள்ளிட்ட பகுதிகளில் வசிக்கும் மீனவர்களும், மக்களின் முதல்வர் செல்வி ஜெயலலிதாவுக்கு ஆதரவாக வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர்.

நாகை மாவட்டம் கோடியக்கரையிலிருந்து கொடியம்பாளையம் வரை உள்ள 54 மீனவ கிராமங்களில் தொடர்ந்து 4-வது நாளாக மீனவர்கள் வேலைநிறுத்தப் போராட்டம் மேற்கொண்டனர். கொடியம்பாளையம் தீவில் 500-க்கும் மேற்பட்ட மீனவர்கள் வாயில் கருப்புத் துணியை கட்டிக்கொண்டு, கடலில் இறங்கி போராட்டம் நடத்தினர். மீனவர் நலனுக்காக பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொண்டுள்ள தமிழக மக்களின் முதல்வர் செல்வி ஜெயலலிதாவுக்கு நீதி கிடைக்கும் வரை வேலைநிறுத்தப் போராட்டம் தொடரும் என மீனவர்கள் தெரிவித்தனர்.

ராமநாதபுரம் மாவட்டம் சோழியக்குடி விசைப்படகு மீனவர்கள் 2-வது நாளாக நேற்றும் கடலுக்குச் செல்லாமல் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர். மீனவ சமுதாயத்திற்காக பல நன்மைகளை செய்துள்ள தமிழக மக்களின் முதல்வர் செல்வி ஜெயலலிதா, சிறையில் அடைக்கப்பட்டிருப்பது தங்களை மிகுந்த சோகத்தில் ஆழ்த்தியிருப்பதாக மீனவர்கள் வேதனையோடு தெரிவித்தனர். ராமேஸ்வரம், மண்டபம் பகுதி மீனவர்கள் காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டத்தை தொடங்கியுள்ளனர்.

தூத்துக்குடியில் விசைப்படகு மற்றும் நாட்டுப்படகு மீனவர்கள் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் நேற்றும் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர்.

மக்களின் முதல்வர் செல்வி ஜெயலலிதாவுக்கு எதிரான அநீதியைக் கண்டித்து, கன்னியாகுமரி முக்கூடல் சங்கமத்தில், 300-க்கும் மேற்பட்ட மீனவர்களும், பெண்களும் கடலில் இறங்கி போராட்டத்தில் ஈடுபட்டனர்.

ஈரோடு சத்தியமங்களத்தை அடுத்துள்ள கொடிவேறி அணை பகுதியைச் சேர்ந்த மீனவ மக்கள், மக்களின் முதல்வர் செல்வி ஜெயலலிதாவுக்கு ஆதரவு தெரிவித்து உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

விழுப்புரம் மாவட்டம் சின்னமுதலியார் சாவடிக்குப்பம், தந்திராயன்குப்பம், நடுக்குப்பம், சோதனைக்குப்பம் ஆகிய கிராமங்களைச் சேர்ந்த மீனவர்கள் கடலுக்குச் செல்லாமல் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00