மக்களின் முதல்வர் ஜெயலலிதாவுக்கு எதிராக தொடரப்பட்ட பொய் வழக்கைக் கண்டித்தும், கர்நாடக தனி நீதிமன்றத்தால் வழங்கப்பட்ட தீர்ப்புக்கு எதிராகவும் அ.இ.அ.தி.மு.க.வைச் சேர்ந்த பல்வேறு அமைப்பினர் அறப்போராட்டம்

Oct 1 2014 3:56PM
எழுத்தின் அளவு: அ + அ -

மக்களின் முதல்வர் செல்வி ஜெயலலிதாவுக்கு எதிராக தொடரப்பட்ட பொய் வழக்கைக் கண்டித்தும், கர்நாடக தனி நீதிமன்றத்தால் வழங்கப்பட்ட தீர்ப்புக்கு எதிராகவும் அ.இ.அ.தி.மு.க.வைச் சேர்ந்த பல்வேறு அமைப்பினரும் அறப்போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.

சென்னையில் உள்ள அ.இ.அ.தி.மு.க. தலைமை கழக அலுவலகத்திலிருந்து போயஸ் தோட்டம் வரை, அ.இ.அ.தி.மு.க. தகவல் தொழில்நுட்ப பிரிவு ஆசிரியர்கள், மாணவர்கள், ஊழியர்கள் மனிதச் சங்கிலி இயக்கம் நடத்தினர். இதில், நூற்றுக்கணக்கான மாணவ-மாணவிகளும், தகவல் தொழில்நுட்ப பிரிவு ஊழியர்களும், இளம் தொழில் முனைவோர்களும் மிகுந்த ஆர்வத்துடன் கலந்து கொண்டனர். மக்களின் முதல்வர் செல்வி ஜெயலலிதாவை, உடனடியாக விடுவிக்க வேண்டும் எனும் வாசகங்கள் அடங்கிய பதாகைகளை உயர்த்திப் பிடித்திருந்த அவர்கள், கருணாநிதி, சுப்பிரமணியன் சுவாமி ஆகியோரைக் கண்டித்து முழக்கங்கள் எழுப்பினர்.

சேப்பாக்கம் அரசு விருந்தினர் மாளிகை எதிரே எம்.ஜி.ஆர். இளைஞர் அணி சார்பில் உண்ணாவிரத அறப்போராட்டம் நடைபெற்று வருகிறது. இதில், நூற்றுக்கணக்கான இளைஞர்கள் கலந்துகொண்டு, மக்களின் முதல்வர் செல்வி ஜெயலலிதாவை விடுதலை செய்யக்கோரி முழக்கங்கள் எழுப்பினர்.

வள்ளூவர் கோட்டம் அருகே, கழக மாணவரணி சார்பில் மாபெரும் உண்ணாவிரதப் போராட்டம் நடைபெற்று வருகிறது. ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டுள்ள இந்த அறப்போராட்டத்தில், மக்களின் முதல்வர் செல்வி ஜெயலலிதாவுக்கு இழைக்கப்பட்ட அநீதியைக் கண்டித்து முழக்கங்கள் எழுப்பப்பட்டன.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00